விசேட செய்தி

விஜய் ரசிகர்களை பாராட்டிய விஷால்

திருட்டு விசிடிக்கு எதிராக தமிழ் திரையுலகம் போராடி வரும் நிலையில், தற்போது விஜய் ரசிகர்கள் திருட்டு விசிடிக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். திருட்டு விசிடியை தடுத்து நிறுத்தக்கோரி கரூர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகிகள் தரப்பில் கரூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரிடம் மனு ஒன்றை கொடுத்துள்ளனர்.

மேலும் விசேட செய்திகள்...

மேலும் சினிமா செய்திகள்

அஜித் படத்துக்கு வில்லன் ரெடி

அஜித் படங்களின் நடிகர், நடிகையர்களின் விவரங்கள் ரொம்பவும் ரகசியமாகவே பாதுகாக்கப்படும். இருப்பினும், அவர் படத்தில் நடிப்பவர்களுடைய விவரங்கள் எப்படியாவது வெளியே வந்துவிடுகின்றன. அஜித் தற்போது நடித்து வரும் சிறுத்தை சிவா படத்திற்கு முதலில் யார் ஹீரோயின் என்பது தெரியாமலேயே இருந்து வந்தது.

கதாநாயகிகள் எதையெல்லாம் பார்த்து பயப்படுகிறார்கள்?

சினிமாவில் பேயாகவும் வில்லியாகவும் வாள் வீசி அதிரடி சண்டை போடும் மகாராணி வேடங்களிலும் நடிக்கும் கதாநாயகிகள் நிஜ வாழ்க்கையில் சில விஷயங்களை பார்த்து பயப்படுகிறார்கள்.

சிவகார்த்திகேயனை நான் கொண்டாடுவதில் என்ன தப்பு?: விஜய்சேதுபதி பேச்சு

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தை ‘வா டீல்’ படத்தை இயக்கிய ரத்தின சிவா இயக்கியுள்ளார். இப்படம் வருகிற அக்டோபர் 7-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்துள்ளார். சதீஷ், கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஜெயம் ரவியின் போகன் படம் எப்போது ரிலீஸ்?

ஜெயம் ரவி – ஹன்சிகா மூன்றாவது முறையாக இணைந்து நடித்திருக்கும் ‘போகன்’ படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை ‘ரோமியோ ஜுலியட்’ படத்தை இயக்கிய லக்ஷமண் இயக்கியுள்ளார்.

மீண்டும் நடிக்க வந்ததில் மகிழ்ச்சி: பிரபுதேவா

தமிழ் பட உலகில் 1990-களில் முன்னணி கதாநாயகனாக இருந்தவர் பிரபுதேவா. அதன்பிறகு டைரக்டராக மாறி தமிழ், தெலுங்கு இந்தியில் படங்கள் இயக்கினார். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ‘தேவி’ படத்தில் மீண்டும் கதாநாயகனாக நடித்துள்ளார்.

விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் கும்பகோணம் கோவிலுக்கு சென்றது ஏன்?

‘நானும் ரவுடிதான்’ படத்தில் நடித்தபோது இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும்-நயன்தாராவுக்கும் காதல் மலர்ந்ததாக கோலிவுட்டில் பரவலாக செய்தி பரவி வந்தது. அந்த படப்பிடிப்பின்போது இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட போட்டோக்கள் இணையதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

சிவகார்த்திகேயன் படத்தில் முன்னணி காமெடியன்கள்

சிவகார்த்திகேயன் நடிப்பில் ‘ரெமோ’ படம் ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில், அடுத்தாக மோகன் ராஜா இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளார். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் மூலம் ஆர்.டி.ராஜா தயாரிக்கவிருக்கிறார்.

சூர்யா படத்தில் பாகுபலி ஹீரோ?

சூர்யா தற்போது ஹரி இயக்கத்தில் ‘எஸ்-3’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தற்போது இப்படத்தில் ‘பாகுபலி’ படத்தின் ஹீரோ பிரபாஸ் முக்கிய தோற்றத்தில் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான், காஜல் அகர்வால் மீண்டும் விஜய்யுடன் இணைகிறார்களா?

விஜய் தற்போது பரதன் இயக்கத்தில் ‘பைரவா’ படத்தில் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து அட்லி படத்தில் விஜய் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் பிற நடிகர், நடிகையர் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

ஜோக்கர் குரு சோமசுந்தரத்துக்கு வில்லனான சிம்ரனின் கணவர்

சமீபத்தில் வெளிவந்து விமர்சக ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்ற ‘ஜோக்கர்’ படத்தில் நடித்தவர் குரு சோமசுந்தரம். ஏற்கெனவே, சில படங்களில் இவர் சிறுசிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்தாலும், ‘ஜோக்கர்’ படம் இவருக்கு ஹீரோ அந்தஸ்தை வழங்கி கௌரவித்தது.

மீண்டும் ரஜினி பட தலைப்பை கைப்பற்றிய கிருஷ்ணா

சமீபகாலமாக ரஜினி படத்தின் தலைப்பை வைத்து கோலிவுட்டில் புதிய சினிமாக்கள் உருவாகி வருகின்றன. அப்படி, ரஜினி படத்தலைப்பை வைத்து உருவாகும் சினிமாக்கள் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்று வருகின்றன.

இங்கிலீஷ் படம் ஆங்கில படமாக மாறியது

ஆர்.ஜே.மீடியா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய படம் ‘இங்கிலீஷ் படம்’. இப்படம் தற்போது ‘ஆங்கில படம்’ என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது. படத்தில் தலைப்பில் ஆங்கிலம் இருப்பதால் இப்படத்திற்கு வரிவிலக்கு கிடைக்காது என்பதற்காக ‘ஆங்கிலப்படம்’ என்று மாற்றியிருப்பதாக கூறப்படுகிறது.

கவர்ச்சி உடை அணிந்து வந்த கங்கனா ரணாவத்தை முற்றுகையிட்ட ரசிகர்கள்

நடிகைகள் பலர் பொது நிகழ்ச்சிகள் மற்றும் பட விழாக்களுக்கு கவர்ச்சி உடை அணிந்து வருவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்கள். இதனால் சர்ச்சைகளுக்கு ஆளாகிறார்கள்.

நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ்

இசையமைப்பாளராக இருந்து நடிகராக மாறிய ஜி.வி.பிரகாஷ் தற்போது நிறைய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். நடிகராக ஒருபக்கம் நடித்து வந்தாலும் மறுபக்கம் தான் நடிக்கும் படங்களுக்கு இசையமைத்தும் வருகிறார். அந்த வரிசையில் தற்போது எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி. நடிக்கும் ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்திற்கும் இவரே இசையமைத்து வருகிறார்.

ரெமோ படத்தின் சென்சார் முடிவு வெளியானது

சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் ‘ரெமோ’. இப்படத்தை பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ளார். பி.சி.ஸ்ரீராம், ரசூல் பூக்குட்டி, சீன் பூட், அனிருத் என மிகப்பெரிய தொழில்நுட்ப கலைஞர்களும் இப்படத்தில் கைகோர்த்துள்ளனர். இப்படத்தை 24AM ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் ஆர்.டி.ராஜா தயாரித்துள்ளார்.

ஆதரவற்ற குழந்தைகளின் கனவை நனவாக்கிய மைம் கோபி

‘கபாலி’, ‘மாயா’, ‘மெட்ராஸ்’ படங்களில் நடித்தவர் நடிகர் மைம் கோபி. ஜி மைம் ஸ்டூடியோ என்கிற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளியும் நடத்தி வருகிறார். ஆதரவற்ற குழந்தைகளுக்காக பல கலை நிகழ்ச்சிகளையும் தொடர்ந்து நடத்தி வருகிறார்.

சுந்தர்.சியின் பிரம்மாண்ட படத்தில் இணைந்த ஆர்யா

சுந்தர்.சி. மிகப்பெரிய பட்ஜெட்டில் புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார். இப்படத்தை ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவிருக்கிறது. இப்படத்திற்கு ‘சங்கமித்ரா’ என்று பெயர் வைத்திருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், அதிகாரப்பூர்வ தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை.

உலக திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட சூர்யாவின் 24 படம்

விக்ரம்குமார் இயக்கத்தில் சூர்யா நடித்த ‘24’ படம் சில மாதங்களுக்கு முன்பு திரைக்கு வந்தது. இந்த படத்தை ‘2டி’ என்டர்டெயின்மென்ட் படநிறுவனம் தயாரித்து இருந்தது. இதில் சூர்யா, தந்தை-மகன், வில்லன் ஆகிய 3 வேடங்களில் நடித்து இருந்தார்.

விஷால் நடிக்கும் ‘துப்பறிவாளன்’ பூஜையுடன் தொடங்கியது

விஷால் நடிப்பில் ‘கத்திசண்டை’ படம் உருவாகிவரும் நிலையில், மிஷ்கின் இயக்கத்தில் ‘துப்பறிவாளன்’ என்ற படத்திலும் விஷால் நடிக்க ஒப்பந்தமாகியிருந்தார். இப்படத்தின் ஆரம்பகட்ட பணிகள் சில நாட்களுக்கு முன் தொடங்கியது. இந்நிலையில், தற்போது இப்படத்திற்கான பூஜை இன்று நடந்துள்ளது.

புலி படமான இடத்தில் சிங்கம் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு

சூர்யா தற்போது பிசியாக நடித்து வரும் படம் ‘எஸ்.3’. ஹரி இயக்கத்தில் வெளிவந்த ‘சிங்கம்’ படத்தின் மூன்றாம் பாகமாக உருவாகி வரும் இப்படத்தில் அனுஷ்கா, ஸ்ருதிஹாசன், ராதாரவி, ராதிகா சரத்குமார், விவேக், சூரி உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

ரஜினி ஒருபோதும் அரசியலுக்கு வரமாட்டார்: சகோதரர் சத்யநாராயணா பேட்டி

ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோவிலுக்கு இன்று காலை நடிகர் ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா தனது குடும்பத்துடன் வந்தார். அவருக்கு கோவில் நிர்வாகம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

‘சைத்தான்’ படத்தில் விஜய் ஆண்டனியின் கதாபாத்திரம் வெளியானது

‘பிச்சைக்காரன்’ வெற்றிக்கு பிறகு விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘சைத்தான்’. இப்படத்தை பிரதீப் கிருஷ்ணமூர்த்தி இயக்கியுள்ளார். அருந்ததி நாயர், ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இப்படத்திற்கு விஜய் ஆண்டனியே இசையமைத்திருக்கிறார். பாத்திமா விஜய் ஆண்டனி தயாரித்துள்ளார்.

‘பைரவா’ படத்தில் என்னுடைய காட்சியை கட் செய்தால் தற்கொலை செய்வேன்: எடிட்டருக்கு சதீஷ் மிரட்டல்

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள ‘றெக்க’ படத்தில் காமெடி நடிகர் சதீஷும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதுமட்டுமில்லாமல் விஜய் நடிக்கும் ‘பைரவா’ படத்திலும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்கும் இறுதிச்சுற்று

மாதவன் நடிப்பில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தமிழில் வெளிவந்து வெற்றிநடை போட்ட படம் ‘இறுதிச்சுற்று’. குத்துச்சண்டையை மையப்படுத்தி வெளிவந்த இந்த படத்தில் நிஜ குத்துச்சண்டை வீராங்கனை ரித்திகா சிங் நடித்திருந்தார். சுதா கொங்கரா பிரசாத் என்பவர் இயக்கியிருந்தார். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருந்தார்.

நடிகைகள் பானுப்பிரியா, சரண்யாவுடன் போட்டி போடும் ஜோதிகா

‘36 வயதினிலே’ படத்துக்கு பிறகு ‘குற்றம்கடிதல்’ பிரம்மா இயக்கும் புதிய படத்தில் ஜோதிகா நடித்து வருகிறார். இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் சாதிக்க முடியும் என்பதை வெளிப்படுத்தும் வேடம்.
மேலும் சினிமா செய்திகள்...

திரைவிமர்சனம்

ஹவுல் – திரை விமர்சனம்

நாயகன் எட் ஸ்பெல்லீர்ஸ் மெட்ரோ ரெயிலில் டிக்கெட் பரிசோதகராக பணிபுரிந்து வருகிறார். ஒருநாள் அவர் பணியில் இருந்த ரெயில் வனப்பகுதியில் செல்லும்போது, ஒரு மான் ரெயிலில் அடிபட்டு இறக்கிறது. இதனால், ரெயில் நடுக்காட்டில் நிறுத்தப்படுகிறது. என்ஜினுக்குள் மாட்டிக் கொண்ட மானை வெளியே எடுப்பதற்காக டிரைவர் கீழே இறங்குகிறார்.

ஒறுத்தல் – திரை விமர்சனம்

நாயகன் செந்தில் ஜெகதீசன் ஐடி கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். இவரது அம்மாவுக்கு தனது மகன் சொந்த வீடு கட்டி, திருமணம் செய்துவைத்து பார்க்க வேண்டும் என்ற ஆசை.

ஆண்டவன் கட்டளை – திரை விமர்சனம்

குடும்ப கஷ்டம் காரணமாக விஜய் சேதுபதி லண்டனுக்கு வேலை தேடிச் செல்ல முடிவெடுக்கிறார். இவருடன் நண்பர் யோகி பாபுவும் லண்டனுக்கு செல்ல முடிவு செய்ய, இருவரும் கிராமத்தில் இருந்து சென்னைக்கு வருகிறார்கள். சென்னையில் இருவரும் ஏஜென்ட் மூலம் பாஸ்போர்ட் எடுக்கிறார்கள்.

தொடரி – திரை விமர்சனம்

டெல்லியில் இருந்து சென்னை நோக்கி வரும் விரைவு ரெயில் கேண்டீனில் நாயகன் தனுஷ் வேலை செய்கிறார். நடிகைக்கு மேக்கப் போடும் கீர்த்தி சுரேசும் அதே ரெயிலில் வருகிறார். கீர்த்தி சுரேஷை பார்த்தவுடனே அவள் அழகில் மயங்கிவிடுகிறார் தனுஷ்.

உச்சத்துல ஷிவா – திரை விமர்சனம்

நாயகன் கரண் ஒரு டாக்சி டிரைவர். ஒருநாள் இரவு இவர் சவாரியை இறக்கிவிட்டு காரில் சென்று கொண்டிருக்கும் நிலையில், நாயகி நேகா ரத்னாகரன் மணக்கோலத்தில் ஒருவருடன் நடுரோட்டில் ஓடி வந்துகொண்டிருக்கிறாள்.

சதுரம் 2 – திரை விமர்சனம்

தொழிலில் நேர்மையாக இருக்கும் டாக்டர் தன்னுடைய குடும்பத்திற்கு துரோகம் செய்கிறார். அவரும், பணத்துக்காக பெரிய கோடீஸ்வரர்களின் அந்தரங்க வாழ்க்கையை படம்பிடித்துக் கொடுக்கும் போட்டோ கிராபர் ஒருவரும் சதுரமான அறையில் ஒரு காலில் சங்கிலியுடன் எதிரெதிர் மூலையில் கட்டப்பட்டிருக்கிறார்கள்.

புதுசா நான் பொறந்தேன் – திரை விமர்சனம்

கொடைக்கானலில் நாயகன் பியோன் ஜெமினியும், நாயகி கல்யாணி நாயரும் அருகருகே வீட்டில் வசித்து வருகிறார்கள். நாயகனுக்கு நாயகியை பின்தொடர்வதே வேலை. அவளோ இவனை கண்டுகொள்வதே கிடையாது. நாயகன் அவளை பார்ப்பதற்காகவே அடிக்கடி அவள் வீட்டுக்கு சென்று அவளது அப்பாவிடம் பேச்சு கொடுத்து வருகிறான்.

இருமுகன் – திரை விமர்சனம்

உளவுத்துறை அதிகாரிகளான விக்ரமும், நயன்தாராவும் சேர்ந்து லவ் என்ற மிகப்பெரிய போதை மருந்து கடத்தல் கும்பல் தலைவனை கொல்வதற்காக பெரிய திட்டம் தீட்டுகிறார்கள். லவ் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, மாறுவேடத்தில் அங்கு சென்று குண்டு வைத்து அவனைக் கொல்கின்றனர்.

தகடு – திரை விமர்சனம்

மன்னராட்சி காலத்தில் வறட்சியின் காரணமாக பஞ்சத்தில் சிக்கித் தவிக்கும் ஒரு நாட்டின் அரசரின் கையில் ஒரு தகடு இருக்கிறது. அந்த தகட்டில் பொன், வைடூரியங்கள் நிறைந்த ஒரு புதையல் இருக்கும் இடத்திற்கான வழி இருக்கிறது.

குற்றமே தண்டனை – திரை விமர்சனம்

குற்றங்களுக்கு தண்டனை கிடைக்காமல் போனாலும் மனசாட்சிப்படி தண்டனை நிச்சயம் கிடைக்கும் என்பதை மனதில் பதிய வைத்திருக்கும் படம் குற்றமே தண்டனை.
மேலும் திரைவிமர்சனங்கள்...

விளம்பரம்

நடிகைகள் கேலரி

திரைப்பட கேலரி

நிகழ்வுகள் கேலரி

நடிகர்கள் கேலரி