விசேட செய்தி

ரஜினி படத்தில் நடிக்கும் மூன்று பேர்

ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்குகிறது. இசையமைப்பாளர், எடிட்டர், ஒளிப்பதிவாளர் யார் என்பது முடிவாகிவிட்டது. முன்னணி நடிகர்களில் மூன்று பேர் மட்டுமே இதுவரை ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் பிரகாஷ்ராஜ், கலையரசன் மற்றும் அட்டகத்தி தினேஷ்.

மேலும் விசேட செய்திகள்...

மேலும் சினிமா செய்திகள்

செப்டம்பரில் இரண்டாவது ஆட்டத்தை ஆரம்பிக்கும் ராஜமௌலி

பாகுபலி இன்னும் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறது. ஆந்திராவில் தயாரான இந்த மெகா பட்டாசு சீனா, ஜப்பான் தேசங்களிலும் வெளியாகிறது. அங்கு புஸ்சாகுமா, பெரிதாக வெடிக்குமா என்று அறிய அனைவருமே ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

ஆக்ஷன் அவதாரம் எடுக்கும் பாபி சிம்ஹா

அமுல்பேபி முகத்துடன் அறிமுகமாகும் நடிகர்களும் நாலு படம் நடிப்பதற்குள், ஆக்ஷன் ஹீரோவாக முயற்சிக்கிறார்கள். ஆக்ஷன் செய்ய முடிந்தால் மட்டுமே முன்னணி நடிகராக முடியும் என்பதால், அவர்களைச் சொல்லியும் குற்றமில்லை.

சூரியின் ஐ போனை உடைத்த அஞ்சலிமாலை மலர் |

அஞ்சலி தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘சகலகலா வல்லவன்’ என்ற படத்தில் நடித்துள்ளார். ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை சுராஜ் இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். இப்படம் வருகிற ஜூலை 31-ந் தேதி வெளியாகவிருக்கிறது.

நடன போட்டியில் மூக்குடைந்த நடிகை ஷில்பா ஷெட்டியின் தங்கை

விஜயகாந்துடன் தமிழில் ‘ராஜ்ஜியம்’ திரைப்படத்தில் நடித்தவர் ஷமிதா ஷெட்டி. இவர் புகழ்பெற்ற இந்தி நடிகையான ஷில்பா ஷெட்டியின் தங்கை ஆவார். இவர்தான் பாலிவுட்டில் அறிமுகமான முதல் திரைப்படமான ‘மொஹப்பதேன்’ படத்தில் சிறந்த அறிமுக நடிகைக்கான ‘ஐஃபா’ விருதினை வென்றவர்.

திருநங்கைகள் வேலைவாய்ப்புக்கு புதிய இணைய தளம்: நடிகை ஷகிலா தொடங்கி வைத்தார்

பாரதி கண்ணம்மா அறக்கட்டளை மற்றும் இந்திய திருநங்கை செயலகம் ஆகியவை சார்பில் இந்திய திருநங்கைகள் மாபெரும் விழா நேற்று மதுரை விக்டோரியா மன்றத்தில் நடந்தது. விழாவிற்கு மன்ற செயலாளர் இஸ்மாயில் தலைமை தாங்கினார்.

பாங்காக்கில் ஷாம், மனிஷா கொய்ராலா டூயட்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகைகளின் மனத்துணிச்சல் பிரமிக்க வைக்கிறது. புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, முடி கொட்டிப் போய், முறையான சிகிச்சை எடுத்து அதிலிருந்து மீண்டு வந்து படங்களில் நடித்து வருகிறார், மம்தா மோகன்தாஸ்.

ஒரு போட்டோவுக்கு ஒரு கோடி ரூபாய் கேட்கும் நடிகை ராகுல் பிரீத் சிங்

நடிகை ராகுல் பிரீத் சிங் செல்வராகவனின் ‘7ஜி ரெயின்போ காலனி’ திரைப்படத்தின் கன்னட ரீமேக்கான ‘கில்லி’-இல் அறிமுகமானார். தமிழில் ‘தடையறத் தாக்க’ திரைப்படத்தில் அறிமுகமான இவர், கெளதம் கார்த்திக் உடன் ‘என்னமோ ஏதோ’ படத்திலும் தோன்றினார்.

ரஜினி படத்தில் நான் நடிக்கிறேனா?: ராதிகா ஆப்தே விளக்கம்

‘லிங்கா’ படத்திற்கு பிறகு ரஜினி, அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் நடிக்கவிருப்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தில் பிரகாஷ் ராஜ், ‘அட்டக்கத்தி’ தினேஷ், கலையரசன் உள்ளிட்டோர் நடிப்பது உறுதியாகிவிட்ட நிலையில், இப்படத்தில் நடிக்கும் கதாநாயகி மட்டும் இன்னும் உறுதியாகாமல் இருந்து வந்தது.

இளவரசியாக மாற்ற ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப்

ஹன்சிகா தற்போது விஜய்யுடன் ‘புலி’ படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் இவர் இளவரசி வேடத்தில் நடிக்கிறார். இந்த வேடத்திற்காக ஹன்சிகாவுக்கு 3 மணி நேரம் மேக்கப் போட்டுள்ளனர்.

புலி டீசரைத் தொடர்ந்து பாடலும் புதிய சாதனை

விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘புலி’ படம் விநாயகர் சதுர்த்தியன்று வெளியாகவிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் விஜய் பிறந்தநாளில் வெளியிடப்பட்டது. இந்த டீசரை யூடிப்பில் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் பார்த்து, அதற்கு பெரிய வரவேற்பு கொடுத்தனர்.

தனுஷ் எனக்கு நண்பன் இல்லை: சிவகார்த்திகேயன் அதிரடி

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் வளர்ந்த நடிகர்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர். இவர், நடித்த அனைத்து படங்களுமே வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெற்றுள்ளன. ஆரம்பத்தில் அறிமுக நடிகைகளிடம் ஜோடி சேர்ந்து வந்த சிவகார்த்திகேயன், தற்போது முன்னணி ஹீரோயின்களுடன் ஜோடி போட்டு நடித்து வருகிறார்.

விஷாலுக்கு வில்லனான சத்யராஜ்?

விஷால் நடிப்பில் வெளிவந்த சண்டக்கோழி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க இயக்குனர் லிங்குசாமி தற்போது முழு வீச்சில் களமிறங்கியிருக்கிறார். இதில், விஷாலே ஹீரோவாக நடிக்கவிருக்கிறார். இவருக்கு ஹீரோயினாக நடிப்பதற்கு சமந்தா மற்றும் முன்னணி நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பெரிய இயக்குனர்களின் படங்களை இழந்த ஜெயம் ரவி

நீண்ட இடைவேளைக்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் ‘ரோமியோ ஜூலியட்’ வெளியானது. இது ரசிகர்களிடையே அதிகம் வரவேற்பு பெற்றது. இதில் ஹன்சிகா ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

தேவி ஸ்ரீபிரசாத்தின் புதிய காதலி நடிகை ப்ரணித்தா?

அப்படித்தான் எலலோரும் சொல்கிறார்கள். இரண்டு பேரும் ஒன்றாக சுற்றுகிறார்கள், அடிக்கடி ஹோட்டலில் சந்தித்துக் கொள்கிறார்கள், நிச்சயமாக அது காதல்தான் என்று ஆந்திரா மீடியாக்கள் சத்தியம் செய்கின்றன. தேவி ஸ்ரீபிரசாத்தின் முன்கதைச் சுருக்கம் தெரிந்தவர்கள் மட்டும் புன்னகைக்கிறார்கள்.

லட்சுமி மேனனின் பேய் அவதாரம்

கரகாட்டக்காரன் படத்தின் ரிமேக்கில் நடிக்க வேண்டும் என்பது லட்சுமி மேனனின் விருப்பம். ஆனால், ஜெகன்மோகினி டைப் படத்தில் நடிக்கும் யோகம்தான் அவருக்கு. ஆம், லட்சுமி மேனனும் பேயாக நடிக்கிறார்.

கம்போடியா இனப்படுகொலையை மையப்படுத்தி படம் இயக்கும் ஏஞ்சலீனா ஜோலி

பிரபல ஹாலிவுட் நடிகையும், இயக்குனருமான ஏஞ்சலீனா ஜோலி இயக்கும் அடுத்த திரைப்படத்தை பற்றிய செய்திகள் தற்போது வெளியாகியுள்ளன.

குறும்பட தயாரிப்பாளர்களுக்காக யூடியூப் சேனல் தொடங்கிய ஐஸ்வர்யா தனுஷ்

இயக்குனர் ஐஸ்வர்யா தனுஷ் “டென் என்டர்டெயின்மென்ட்” எனும் யூடியூப் சேனல் ஒன்றை துவங்கி இளம் தலைமுறையினரை ஊக்கபடுத்தும் வகையில் அவர்களது குறும் படங்களை வெளியிட உள்ளார்.

சாந்தனு நடிக்கும் ரொமான்டிக் த்ரில்லர் முப்பரிமாணம்

சாந்தனு – கீர்த்தி திருமணம் விரைவில் நடக்கயிருக்கிறது. காதலியை கைப்பிடிக்கப் போகும் நேரத்தில் சில தீர்மானங்களை சாந்தனு எடுத்திருக்கிறார். இனிமேல் வழவழ கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பது அதில் ஒன்று.

ஜெயம் ரவியை வழி நடத்தி செல்லும் நயன்தாரா

ஜெயம் ரவி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் ‘தனி ஒருவன்’. இவருடைய அண்ணனான ஜெயம் ராஜா இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

அஜித் படத்தின் பாடலை தலைப்பாக்கிய டெய்சி படக்குழுவினர்

மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்ற பாடல்கள், தலைப்பாக வருவது அந்த பாடலின் வெற்றி படத்தின் தலைப்புக்கும் உதவும் என்பதால்தான்.

மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் – செப்டம்பரில் தொடங்குகிறது

காக்கா முட்டை மணிகண்டனின் மூன்றாவது படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதாக ஏற்கனவே கூறியிருந்தோம். இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பரில் தொடங்குகிறது.

புவனா ஒரு கேள்விக்குறி அல்ல

இவன் வேற மாதிரி படத்தில் அறிமுகமான சுரபி வேலையில்லா பட்டதாரியில் ஒரு சின்ன வேடத்தில் தோன்றினார். அவர் ஷோலோ ஹீரோயினாக நடித்து அடுத்து வெளிவரவிருக்கும் படம், புகழ். உதயம் மணிமாறன் படத்தை இயக்கியுள்ளார். ஜெய் நாயகன்.

கரகாட்ட கனகாவாக ஆசைப்படும் லட்சுமி மேனன்

பட்டி தொட்டியெங்கும் வசூலில் பட்டையை கிளப்பிய படம், கங்கை அமரன் இயக்கிய கரகாட்டக்காரன். எளிய மனிதர்களின் எளிய கதை. கவுண்டமணி, செந்திலின் காமெடியும் சேர்ந்து, கரகாட்டக்காரனை எவர்கிரீன் ஹிட்டாக்கியது.

சிறந்த நடிகர் விருதை தினேஷுடன் பகிர்ந்து கொண்ட சித்தார்த்

சமீபத்தில் நடந்த திரையுலக விருது வழங்கும் விழாவில், அனைவரது பாராட்டையும் அள்ளிக் கொண்டார் சித்தார்த். விழாவில் நடனம் எதுவும் ஆடினாரா?

தெருநாய்களுக்கு ஆதரவாக விஷால் உண்ணாவிரதம்

கேரளாவில் தெருநாய்கள் கொல்லப்படுவதை எதிர்த்து தனியார் அமைப்பு ஒன்று நாளை (சனிக்கிழமை) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறது. இதில் விஷால் கலந்து கொள்வதாக அறிவித்துள்ளார்.
மேலும் சினிமா செய்திகள்...

திரைவிமர்சனம்

நாலு போலீஸும் நல்லா இருந்த ஊரும் – திரை விமர்சனம்

பொற்பந்தல் என்னும் கிராம மக்கள் ஒற்றுமையோடும் சமாதானத்தோடும் இருக்கிறார்கள். இவர்களின் அமைதிக்காகவும் ஒழுக்கத்திற்காகவும் சிறந்த கிராமத்திற்கான ஜனாதிபதி விருதை தொடர்ந்து பெற்று வருகிறது.

ஆவி குமார் – திரை விமர்சனம்

மலேசியாவில் வசிக்கும் ஆவிக்குமாரான உதயா ஆவிகளுடன் பேசக்கூடியவர். ஒருநாள் மலேசியாவின் போலீஸ் அதிகாரியான நாசர், ஒரு தொலைக்காட்சியில் ஆவிக்குமாருடன் உரையாடல் நடத்துகிறார்.

மிஸ் பண்ணிடாதீங்க அப்புறம் வருத்தப்படுவீங்க – திரை விமர்சனம்

நாயகன் சுரேஷும், நாயகி அக்‌ஷதாவும் ஒரே கல்லூரியில் விஸ்காம் படிப்பில் இறுதி ஆண்டில் படித்து வருகிறார்கள்.

பாகுபலி – திரை விமர்சனம்

படத்தின் ஆரம்பத்தில் ரம்யா கிருஷ்ணன் முதுகில் அம்பு பாய்ந்தும், கையில் குழந்தையுடனும் ஒரு நீர்வீழ்ச்சிக்கு ஓடி வருகிறார். அவரையும், அந்த குழந்தையும் கொன்றுவிட வீரர்கள் பாய்ந்து வருகின்றனர்.

சாம்பவி – திரை விமர்சனம்

நாயகன் சௌந்தரும், நாயகி சுருதியும் ஒருவருக்கொருவர் உயிருக்குயிராய் காதலிக்கிறார்கள். ஆனால், நாயகன் சௌந்தரோ, அவளை அனுபவிக்க வேண்டும் என்று ஆசையுடன் அலைகிறார்.

டெர்மினேட்டர் ஒரு தொடக்கம் – திரை விமர்சனம்

டெர்மினேட்டர் ஜெனிசிஸ் திரைப்படம் ஹாலிவுட்டில் மிக பிரபலமான டெர்மினேட்டர் சீரிஸின் ஐந்தாவது பாகமாகும். பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் ஸ்கை டான்ஸ் புரொடக்சன்ஸ் இணைந்து வெளியிட்டிருக்கும் இப்படத்தை ஆலன் டெய்லர் இயக்கியிருக்கிறார்.

பரஞ்சோதி – திரை விமர்சனம்

நாயகன் சாரதியின் அப்பா விஜயகுமார் சாதி வெறி பிடித்தவர். ஆனால், சாரதியோ, வேறு சாதியை சேர்ந்த சங்கர் குரு ராஜாவின் மகளான நாயகி அனிசிபாவை காதலிக்கிறார்.

பாலக்காட்டு மாதவன் – திரை விமர்சனம்

விவேக், சோனியா அகர்வால் தம்பதியருக்கு இரு குழந்தைகள். பட்ஜெட் போட்டு குடும்பத்தை நடத்தி வரும் இருவரும் ஒரே கம்பெனியில் வேலை செய்கிறார்கள். தனது மனைவியைவிட குறைந்த சம்பளமே வாங்குவதால் விவேக், மனதில் ஒரு தாழ்வு மனப்பான்மை ஏற்படுகிறது.
மேலும் திரைவிமர்சனங்கள்...

விளம்பரம்

நடிகைகள் கேலரி

திரைப்பட கேலரி

நிகழ்வுகள் கேலரி

நடிகர்கள் கேலரி