MENUMENU

நடிகர் பிரகாஷ்ராஜ் விவாகரத்து வழக்கில் திடீர் திருப்பம்

pirakash2நடிகர் பிரகாஷ்ராஜ் அவரது மனைவி லலிதா குமாரி ஆகியோர் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்டு மனுதாக்கல் செய்துள்ளனர். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னக மொழிப்படங்களில் முன்னணி நடிகராக இருக்கும் பிரகாஷ் ராஜூக்கும், நடிகை டிஸ்கோ சாந்தியின் சகோதரியான லலிதாகுமாரிக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்நிலையில் கடந்த ஆண்டு லலிதாகுமாரிக்கும், பிரகாஷ் ராஜூக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன் மனைவி லலிதாகுமாரியிடம் இருந்து விவாகரத்து கேட்டு பிரகாஜ் ராஜ் குடும்பநல கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். ஆனால் லலிதாகுமாரியோ விவாகரத்துக்கு மறுத்தார்.

இந்த வழக்கை முதன்மை குடும்ப நல கோர்ட் விசாரணை செய்து வரும் நிலையில், இருவரும் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்க முடிவு செய்தனர். இதையடுத்து பிரகாஷ்ராஜூம், லலிதாகுமாரியும் குடும்ப நல கோர்ட்டுக்கு வந்தனர்.

இருவரும் பரஸ்பர அடிப்படையில் விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கின் தீர்ப்பை வரும் 18ம்‌தேதிக்கு தள்ளி வைப்பதாக நீதிபதி தெரிவித்தார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online