MENUMENU

சோயப் – ஆயிஷா விவகாரம் சினிமாவாகிறது!

பரபரப்பும் திருப்பமும் நிறைந்த சமாச்சாரம் எதுவாக இருந்தாலும் படக்கென்று அதைச் ‘சுட்டு’ சுடச் சுட படமாகத் தருவது சினிமாக்காரர்கள் ஸ்டைல்.

பிரபல டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா- சோயப் மாலிக் காதல், திருமண சமாச்சாரங்கள், இடையில் புகுந்த ஆயிஷா சித்திக்கி விவகாரம் சினிமாவையே மிஞ்சும் விறுவிறுப்பு திருப்பங்களுடன் நகரும்போது விட்டுவிடுவார்களா என்ன…. இதோ கேமராவுடன் கிளம்பிவிட்டது ஒரு குழு படமாக்க.

குட்டை பாவாடை சர்ச்சை, இஸ்லாமிய எதிர்ப்பு, நண்பருடன் நடந்த நிச்சயதார்த்த முறிவு, சோயப் விவகாரம், ஆயிஷா குறுக்கீடு என திருப்பங்களுக்கு பஞ்சமில்லாத கதை சானியாவுடையது.

இந்த விவகாரங்கள் ஒன்றையும் விடாமல் சினிமாவில் பதிவு செய்யப் போகிறாராம் பிரபல இந்தி இயக்குனர் ஒருவர். இப்போதைக்கு படம் குறித்த அறிவிப்பை அறிவிக்காமல், சானியா – சோயப் திருமணத் தேதி வரை காத்திருக்கப் போகிறார்களாம்.

சானியாமிர்சா, சோயிப் மாலிக் அவரது முதல் மனைவி ஆயிஷா கேரக்டர்களில் நடிக்க நடிகர், நடிகை தேர்வு விறு விறுப்பாக நடப்பதாகக் கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online