MENUMENU

மீண்டும் கார்த்தியுடன் இணைகிறார் தமன்னா

தமிழ் சினிமாவில் ஒரு ஜோடி நடித்த படம் வெற்றி பெற்று விட்டால், அதே ஜோடியை சில பல படங்களை எடுத்து விடுவது வழக்கம். அந்த வகையில் லேட்டஸ்டாக வெற்றி பெற்றுள்ள கார்த்தி – தமன்னா ஜோடியை வைத்து இன்னொரு படம் உருவாகப் போகிறதாம்.

பருத்தி வீரனில் கிராமத்து முரட்டு இளைஞராக நடித்து வெற்றி பெற்ற கார்த்தி, தற்போது நகரத்து மாடர்ன் இளைஞனாகவும் நடித்து வெற்றி பெற்றுள்ளார் – பையா படம் மூலம்.

பையா படத்தில் கார்த்தி, தமன்னா இடையிலான கெமிஸ்ட்ரி அட்டகாசமாக இருப்பதாக கோலிவுட்டிலும், ரசிகர்கள் மத்தியில் பேச்சு நிலவுகிறது. இந்த நிலையில், மீண்டும் தமன்னாவுடன் இணைகிறார் கார்த்தி.

இப்படத்தில் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடிக்கப் போகிறாராம் கார்த்தி. அவருக்கு ஜோடி போடுகிறார் தமன்னா. படத்தில் அதிரடியான காட்சிகள் பல இருக்குமாம். அதேபோல, காதல் காட்சிகளும் கலர்புல்லாக இருக்கும் என்கிறார்கள்.

இந்தப் படத்தின் கேரக்டருக்காக இப்போதே ஸ்டடியில் இறங்கியுள்ளாராம் கார்த்தி.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online