MENUMENU

ஏப்ரல் 30-ம் தேதி சுறா ரிலீஸ்

விஜய்யின் 50 வது படமான சுறா, வரும் ஏப்ரல் 30-ம் தேதி உலகமெங்கும் ரிலீஸாகிறது. சங்கிலி முருகன் தயாரித்துள்ள இந்தப் படத்தை வெளியிடும் உரிமை சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது.

எஸ்பி ராஜ்குமார் இயக்கியுள்ள சுறா, மலையாளத்தில் மோன்லால் நடிப்பில் வெளியான சோட்டா மும்பை படத்தின் தழுவலாகும்.

தமிழுக்கு ஏறப சில மாற்றங்களுடன் படமாக்கப்பட்டுள்ளதாம். தமன்னா ஜோடியாக நடித்துள்ளா. மணிசர்மா இசையில் ஏற்கனவே பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளன (அதே நேரம் இந்தப் பாடல்களில் பெரும்பாலானவை ஏற்கெனவே தெலுங்கு பில்லாவில் இடம் பெற்ற ஹிட் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.)

நகைச்சுவைக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. படத்தின் பெரும்பாலான பகுதிகளில் விஜய் யுடன் வடிவேலு வருவது போல காட்சிகள் அமைத்துள்ளாராம் இயக்குநர். இந்த கோடை விடுமுறையில் வெளியாகும் முதல் பெரிய படம் சுறாதான்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online