MENUMENU

கமல் பட பெயர் மாற்றம்

கமல்ஹாசன், திரிஷா, மாதவன் இணைந்து நடிக்கும் யாவரும் கேளிர் படத்தின் பெயர் காருண்யம் என மாற்றப்பட்டுள்ளது.

கமல்ஹாசன், திரிஷா இணைந்து நடிக்க, மாதவன், விசாலி கண்ணதாசன் முக்கிய வேடங்களில் நடிக்க, கே.எஸ்.ரவிக்குமார் இயக்க உருவாகும் படம் யாவரும் கேளிர்.

உதயநிதி ஸ்டாலின் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் எனத் தெரிகிறது. இந்த நிலையில் படத்தின் பெயரை காருண்யம் என மாற்றியுள்ளனராம்.

முழு நீளக் காமெடிப் படமாக இது உருவாகிறது. முக்கோணக் காதல் கதையான இப்படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். கமல்ஹாசனுடன் பிரசாத் இணைவது இது 2வது முறை. ஏற்கனவே தசாவதாரம் படத்திற்கு பின்னணி இசை மட்டும் அமைத்துக் கொடுத்த்தார் பிரசாத் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் இப்படத்தின் முழு இசையையும் பிரசாத்தே கவனிக்கிறார். அந்த வகையில் இப்படம் இவருக்கு கமல்ஹாசனுடன் முதல் படமாக அமைகிறது.

ஏற்கனவே அன்பே சிவம் படத்தில் மாதவன், கமலுடன் இணைந்து நடித்திருந்தார். தற்போது மீண்டும் இப்படத்தில் இணைகிறார். இப்படத்தின் புதிய தலைப்பான காருண்யமும், அன்பும் கிட்டத்தட்ட ஒரே அர்த்தம் கொண்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online