MENUMENU

நடிகை மனோரமா மீண்டும் மருத்துவமனையில்

உடல் நலக் குறைவு காரணமாக மீண்டும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார் மனோரமா.

ஒரு வருடமாக மூட்டுவலியால் அவதிப்பட்டு வரும் மனோரமா, சமீபத்தில் கேரளா சென்று ஆயுர்வேத சிகிச்சை பெற்றார். அதில் பலன் ஏற்படாததால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மூட்டுவலிக்காக 2 கால்களிலும் அறுவைச் சிகிச்சை செய்துகொண்டார். அதன்பிறகும் அவருக்கு மூட்டுவலி தீரவில்லை.

இதையொட்டி அறுபடை வீடுகளுக்கும் சென்று முருகனை தரிசனம் செய்தார். அதன்பிறகு திருப்பதி சென்று தலைமுடியை காணிக்கையாக செலுத்தினார். திருப்பதியில் இருந்து அவர் திரும்பி வந்து கொண்டிருந்தபோது அவர் பயணம் செய்த கார் விபத்துக்குள்ளானது. இதில் மனோரமா லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இதற்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின் வீடு திரும்பினார்.

இப்போது அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனயில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை இயக்குநர் முக்தா சீனிவாசன் நேற்று சென்று பார்த்தார். மனோரமா மீண்டும் உடல் நலம் பெறுவதற்காக அவருடைய ரசிகர்கள் அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online