MENUMENU

இலங்கையில் படப்பிடிப்புக்கு தடை.. கடுப்பில் சரத்குமார்!

இலங்கையில் படப்பிடிப்பு நடத்தக் கூடாது என தென்னிந்திய திரைப்பட கூட்டமைப்பு தடை விதித்துள்ளதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அதுவும் இங்கிருந்தே கிளம்பியுள்ளது, சரத்குமார் வடிவில்.

தமிழனுக்கு குரல் கொடுப்போம், ரத்தக்கறை படிந்த இலங்கைக்கு போகக் கூடாது என்றெல்லாம் அறிக்கைவிட்டவர்தான் சரத்குமார். தென்னிந்திய நடிகர் சங்கத்தி்ன் தலைவர் வேறு.

ஆனால் சரத்குமாரின் உண்மையான மனநிலை என்னவென்பது இப்போது தெரிந்துவிட்டது.

தன் மனதுக்குள்ளிருந்ததை இப்படிக் கொட்டுகிறார் சரத்குமார்:

‘ஆ ஊன்னா… இலங்கைக்குப் போகாதீங்க.. போனா தடைன்னு சொல்றாங்க. ஆனா தொழிலதிபர்கள் பிஸினஸ் பண்ணிக்கிட்டுதானே இருக்காங்க. இதில் நடிகர் நடிகைகளை மட்டும் டார்கெட் பண்ணா எப்படி? அவங்களும் தொழில்முறை கலைஞர்கள்தானே?’ என்று குமுறியுள்ளார்.

கன்னடத் திரையுலகினரையும் மலையாள சினிமாவையும் கடுமையாக எதிர்த்தவர்தான் சரத். ஆனால் அங்கே வாய்ப்புகள் வந்ததும் ஓடிப்போய் ஏற்றுக் கொண்டார். பழசிராஜா செய்தார். இப்போது கன்னடப் படங்கள் இரண்டில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆக, இனி சரத் குமார் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்வது தவறுதான் போலிருக்கிறது.
குறிப்பு: சரத்தின் மனைவியும் நடிகையுமான ராதிகாவின் ‘தாய் நாடு’ இலங்கைதான்!

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online