MENUMENU

அடுத்த ‘தாடி’ யாரு…? – கலாய்த்த பார்த்திபன்

பூபதி பாண்டியன் இயக்க, யுவன்சங்கர் ராஜா இசையமைத்துள்ள ‘காதல் சொல்ல வந்தேன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா.. இடம் – சத்யம் சினிமாஸ்.

எந்த கான்ட்ராவர்ஸியும் இருக்கக் கூடாது என்று இயக்குநரும் தயாரிப்பாளரும் சொல்லி விட்டார்களோ என்னமோ… பொதுவாகப் பேசிவிட்டு அமர்ந்து கொண்டனர் சிறப்பு விருந்தினர்கள். படத்தின் நாயகன் பாலாஜி, அமைச்சர் பரிதி இளம்வழுதியின் நெருங்கிய உறவினர் என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்!

எல்லோருமே சொல்லி வைத்த மாதிரி படத்தின் நாயகி மேக்னா சுந்தர்ராஜை ஓஹோவென புகழ்ந்து தள்ளினர். இவர் நடித்த முதல்படம் பாலச்சந்தர் தயாரிப்பில் உருவாகி இன்னும் வெளிவராமல் உள்ள கிருஷ்ணலீலை. அடுத்து நந்தா நந்திதா படத்தில் நடித்து வருகிறார்.

விழாவில் பேசிய அனைவரும் ‘நயன்தாராவைப் பிரதியெடுத்த மாதிரி இருக்கிறார் மேக்னா… அடுத்த நயன்தாரா இவர்தான்’ என்று சொல்லிக் கொண்டே போக வெட்கத்தில் ‘ரோஸ்’ பூசிக் கொண்டது மேக்னாவின் முகம்.

ரொம்ப நேரமாக இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த குசும்புப் பார்ட்டியான பார்த்திபன் சும்மா இருப்பாரா.. நேராக மைக் முன் வந்தவர், “டான்ஸ் யூனியனில் பெரிய பிரச்சினை வெடிச்சிருக்கு!” என்றார் சீரியஸாக.

எல்லோரும் என்னமோ ஏதோ என்று பரபரப்புடன் நிமிர, அடுத்த வெடியை இப்படி வீசினார்…

“ஆமாங்க… இந்த ‘நயன்தாரா’வின் கைப்பிடிக்கப் போகும் அடுத்த தாடிக்கார டான்ஸ் மாஸ்டர் யாருன்னு இப்பவே அடிச்சிக்கிறாங்களாம்…!” என்று கூற, தியேட்டர் கொள்ளாத சிரிப்பலை!

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online