MENUMENU

மலையாள தேவதைகளும்! தேவதைகளின் தேவைகளும்!!

தமிழ் சினிமாவில் நடிகையாக என்னென்ன அடிப்படைத் திறமைகள் இருக்க வேண்டும் எனக் கேட்கப்படும் கேள்விக்கு, “வசனங்களை உச்சரிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; பாடத் தெரிந்திருக்க வேண்டும்; நடிக்கத் தெரிந்திருக்க வேண்டும்; அழகாக இருக்க வேண்டும்’ என பதிலளிப்பவர் நீங்களா… ஸாரிங்க…, அந்தக் காலம் மலையேறி பல மாமங்கம் கடந்துவிட்டது.

சமீபத்திய நிலவரப்படி, “கேரளாவில் பிறந்திருக்க வேண்டும். தமிழ் தெரியக் கூடாது. தெரிந்தாலும் பேசிவிடக் கூடாது. கேள்விப் பட்டிராத பெயரைத் தேர்ந்தெடுத்து அதற்குள் ஒளிந்துகொள்ள வேண்டும்’ இவைதான் தமிழ் சினிமா நடிகையாவதற்கான இன்றைய தகுதிகளாக இருக்கின்றன.

“அ’ திரை நிறுவனம் தயாரிப்பில் அறிமுக டைரக்டர் கீரா இயக்கும், “பச்சை என்கிற காத்து’ படத்தில் கதாநாயகியாக நடிப்பவரும் கேரளப் பெண்தான். படம் தொடர்பாக நடந்த பத்திரிகையாளர் சந்தப்பில் கலந்துகொள்ள வந்த அவர், “டைரக்டர் எனது பெயரை மாற்ற வேண்டும் எனக் கூறினார். நான் ஒரு 15 பெயர்களைத் தேர்வு செய்திருந்தேன். அதைக் கேட்ட டைரக்டர், “இதெல்லாம் வேண்டாம். இனி உன் பெயர் தேவதை’ என்றார். நல்ல ஸ்டைலான பெயரா வைப்பார் என நினைத்த எனக்கு, பெரிய ஏமாற்றம்’ என்றார்.

பின், தமியாளத்தில் அவர் பேசுகையில், “என்னுடைய அடுத்த இடத்துக்கு போறதுக்கு, சரியான தளம் இந்தப் படம். நான் பார்த்த ஃபேன்டஸி படங்கள் மாதிரி அல்ல இந்தப் படம். என்னுடைய மாநிலத்தில் சமீபகாலமாக நல்ல படங்கள் வருவது குறைந்துவிட்டது. மலையாளத்தின் சிறந்த டைரக்டர்கள் கூட, தமிழ்ப் பக்கம் வர ஆரம்பித்துவிட்டனர். அதனால் எனது முதல் படம் தமிழில் இருக்க வேண்டும் என நினைத்தேன். நான் நினைத்ததை விட ஒரு சிறந்த படத்தில், ஹீரோவுக்கு இணையான பாத்திரத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்’

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online