MENUMENU

இணங்க மறுத்த இலியானா

“என் ஆயுசுக்கும் இவர்களுக்கு கடமைப்பட்டுள்ளேன்’. இது, முதல் படத்தில் அறிமுகமாகும் நடிகர், நடிகைகள் அடிக்கடி உச்சரிக்கும் வார்த்தை. அது என்னமோ தெரியவில்லை, அந்தப் படத்தின் ஷூட்டிங் முடிந்து பூசணிக்காயை உடைத்த கணத்திலேயே, அவர்கள் கூறிய ஆயுசுக்கு ஆயுசு முடிந்துவிடுகிறது…. அல்லது முறித்துக் கொள்கின்றனர்.

முன்னணி நட்சத்திரங்களை உருவாக்கிய பெரும்பாலான தயாரிப்பாளர்கள் மற்றும் டைரக்டர்களுக்கு இந்த அனுபவம் கிட்டியிருக்கிறது. நாகரீகம் கருதி, இதை அவர்கள் வெளியில் சொல்வதில்லை. அந்தப் பட்டியலில் தற்போது புதிதாகச் சேர்ந்திருப்பவர், டைரக்டர் ஜோதி கிருஷ்ணா. “எனக்கு 20 உனக்கு 18′ படத்தில் ஸ்ரேயாவையும், “கேடி’யில் இலியானா மற்றும் தமன்னாவையும் அறிமுகம் செய்தவர்.

இவர் தற்போது, “ஊலலலா…’ என்ற படத்தை இயக்கி நடிக்கிறார். இதில் நடிக்க, மேற்கூறிய நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினார் ஜோதி கிருஷ்ணா. அவர்களிடம் இருந்து உறுதியான வாக்குறுதிகள் எதுவும் வராததால், ப்ரீத்தி பண்டாரி என்ற பெண்ணை அறிமுகம் செய்துள்ளார். இதுகுறித்துக் கேட்டாலோ, “அவர்களோடு இன்னமும் நட்பாகத்தான் இருக்கிறேன். தொட முடியாத உயரத்துக்கு அவர்கள் சென்றுவிட்டது எனக்கு மகிழ்ச்சிதான்’ என மழுப்புகிறார். இதுபோன்ற பெருந்தன்மையான பேச்சால்தான், நட்சத்திரங்களின் பிம்பம் காக்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online