MENUMENU

23 ஆண்டுக்கு பிறகு மலையாள படத்தில் கமல்

கமல் மலையாள படமொன்றில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அந்தபடத்தின் பெயர் “போர் பிரண்ட்ஸ்” சசி சுரேந்திரன் இயக்குகிறார். இவர் சமீபத்தில் இயக்கிய பல மலையாள படங்கள் வெற்றிகரமாக ஓடின.

போர் பிரண்ட்ஸ் படத்தில் ஜெயராம் கதா நாயகனாக நடிக்கிறார். ஜெயசூர்யா, மீராஜாஸ் மின் ஆகியோரும் நடிக்கின்றனர்.

இதில் நடிக்க கமலை அணுகியபோது கதை பிடித்திருந்ததால் உடனே ஒப்புக்கொண்டார். கமல் சம்பந்தப்பட்ட காட்சி களை சென்னையில் பட மாக்குகின்றனர்.

கமலின் நெருங்கிய நண்பர் ஜெயராம் இருவரும் சாணக்யா என்ற மலையாள படத் தில் 23 ஆண்டுக்கு முன் இணைந்து நடித்தனர். அதன் பிறகு இப் போதுதான் மீண்டும் மலையாள படத்தில் கமல் நடிக்கிறார். அவர் இதில் நடிக்க சம்மதித்ததற்கு ஜெயராம் நண்பர் என்பதும் காரணமாகும்.

இதுபற்றி இயக்குனர் சசி சுரேந்திரன் கூறும் போது, கமல் சாருக்கு கதை பிடித்திருந்தது. எனவே உடனேயே நடிக்க சம்மதித்தார். அவரது கதாபாத்திரம் கதைக்கு திருப்புமுனையாக இருக்கும்.

கமல் என்னிடம் கூறும்போது, ஜெயராம் எனது நல்ல நண்பர் என்பதால் இதில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளேன் என்றார். வருகிற 10-ந் தேதி சென்னையில் இதற்கான படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online