MENUMENU

சென்னை பாக்ஸ் ஆஃபிஸ்

சென்னை பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தை தில்லாலங்கடி கைப்பற்றியுள்ளது. ராவணன் இன்னும் டாப் 5 லிஸ்டில் இருப்பது எதிர்பாராத ஆச்ச‌ரியம் என்றே சொல்ல வேண்டும்.

5. ராவணன்
மணிரத்னத்தின் தோல்விப் படங்களில் ஒன்றாக ராவணன் மாறியிருக்கிறது. ஆறு வாரங்களில் 5 கோடியை வசூலித்திருந்தாலும் விமர்சன‌ ரி‌‌தீயாக படம் பப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் சென்ற வார இறுதி 3 நாள் வசூல் 1.26 லட்சங்கள் மட்டுமே.

4. களவாணி
சற்குணத்தின் களவாணி எதிர்பாராத சர்ப்ரைஸ். இதுவரை சென்னையில் மட்டும் இப்படம் 87 லட்சங்களை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 3.7 லட்சங்கள்.

3. தம்பி அர்ஜுனா
சென்ற வாரம் வெளியான இப்படம் தனது முதல் மூன்று தினங்களில் சென்னையில் மட்டும் 5.53 லட்சங்களை வசூலித்துள்ளது. சென்னையில் இப்படம் 25 லட்சங்களை எட்டினாலே அது மிகப்பெ‌ரிய வெற்றிதான்.

2. மதராசப்;பட்டினம்
விஜய்யின் மதராசப்பட்டினம் மூன்று வார இறுதியில் 3 கோடிகளை வசூலித்துள்ளது. இதன் சென்ற வார இறுதி வசூல் 32 லட்சங்கள்.

1. தில்லாலங்கடி
முதல் பத்து தினங்களில் தில்லாலங்கடி 1.48 கோடியை வசூலித்து அனைவருக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. சென்ற வார இறுதியில் இப்படம் வசூலித்திருப்பது 43 லட்சங்கள். இந்த வசூல் இன்னும் சில வாரங்கள் தொடர்ந்தால் தில்லாலங்கடியும் ஹிட் லிஸ்டில் சேர்ந்துவிடும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online