MENUMENU

நான் மகான் அல்ல – ஸ்பெஷல் ஹைலைட்ஸ்

பிரம்மாண்டமான தயாரிப்பாக ஸ்டுடியோ கிரீன் கே.ஈ.ஞானவேல் தயாரிக்கும் படம், நான் மகான் அல்ல. இப்படத்தில் ஹீரோவாக பருத்தி வீரன், பையா ஆகிய வெற்றிப்படங்களின் நாயகன் கார்த்தியும், அவருக்கு ஜோடியாக தெலுங்கில் நம்பர் ஒன் நடிகையான காஜல் அகர்வாலும் நடிக்கிறார்.

இதில் மேலும் பல நடிகர்கள் நடித்துள்ளனர். எதார்த்தமான, அதே சமயம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்ட படம் என்பதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் இப்படம் பற்றிய சிறப்பு ஹைலைட்ஸ் பின்வருமாறு :

  • இதுவரையில் தமிழ் சினிமாவில் பார்த்திராத புதிய வில்லன்கள் படத்தில் நடித்துள்ளனர்.
  • அப்பா பாடல் – படத்தில் இன்னொரு ஹைலைட் அப்பாவிற்குரிய அர்ப்பணிப்பாக பாடல் அமைந்திருக்கிறது. யுகபாரதி எழுதி, மது பாலகிருஷ்ணன் பாடியிருக்கிறார். ” தெய்வம் இல்லை எனும் போது”
  • கார்த்தி, ஜீவா என்ற பெயரில், பேஸ்க் க‌லெக்ஷன் ஏஜென்ஸி வேலை செய்யும் கேரக்டரில் நடித்திருக்கிறார்.
  • காஜல், மகதீரா படத்தின் பிரம்மாண்ட ஹிட்டுக்கு பிறகு தமிழில் ஒத்துக் கொண்ட முதல் படம். அவர் டேட்ஸ் கொடுத்தபடி தான் சூட்டிங் நடத்தி இருக்கிறார், இயக்குநர்.
  • கார்த்திக்கின் தந்தையா பசங்க ஜெயப்பிரகாஷ் மிகப் பெரிய கேரக்டரில் அசத்தியிருக்கிறார்.
  • கார்த்தி எதார்த்த ரோலில் நடித்திருக்கிறார்.
  • சென்னை பின்னணியில் கதை அமைந்துள்ளது.
  • ஸ்டான்லி மருத்துவமனையில், நைட் ஷாட் எடுத்த போது, பைரக்டர் சுசீந்திரன் மிரண்டு, பயந்து போய்விட்டாராம். இது மறக்க முடியாத புது அனுபவமாம்.
  • எல்லா பாடல்களுமே சென்னையை சுற்றி மிக அழகாக படம் பிடித்து இருக்கிறார் ஒளிப்பதிவாளர் மதி.
  • இந்த படத்தில் ஆர்ட் டைரக்டராக பணிபுரிந்த ராஜீவன் முக்கியமான ரோலில் நடித்திருக்கிறார்.
  • 80 நாட்களில் முடிக்க ஒத்துக் கொண்ட இத்திரைப்படத்தை, மிகுந்த நேர்த்தியாக பிளான் செய்து 77 நாட்களில் படத்தை முடித்திருக்கிறார், இயக்குநர்.
  • ஆகஸ்ட் 20ம் தேதி நான் மகான் அல்ல திரைப்படம் வெளிவர இருக்கிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online