MENUMENU

இன்று முதல் பாணா காத்தாடி

முன்பெல்லாம் படத்தயா‌ரிப்பு நிறுவனத்தை வைத்தே அந்தப் படத்தின் தரம் எப்படி இருக்கும் என்று கூறிவிட முடியும். இப்போது?

அப்படியெல்லாம் எந்த நிறுவனமும் இல்லை என்று கூறிவிட முடியும். ஆனால் விதிவிலக்கு இருக்கதான் செய்கிறது. உதாரணம் சத்யஜோதி பிலிம்ஸ்.

மூன்றாம் பிறை போன்ற படங்களின் தயா‌ரிப்பாளர்கள் இவர்கள் என்பது ஒன்றே இவர்களின் தரத்தை சொல்லிவிடும். இவர்களின் புதிய படம் பாணா காத்தாடி.

பத்‌ரி வெங்கடேஷ் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் நடிகர் முரளியின் மகன் அதர்வா ஹீரோவாக அறிமுகமாகிறார். சமந்தா ஹீரோயின். பிரசன்னா முக்கியமான வேடத்தில் நடித்துள்ளார்.

படம் நன்றாக வந்திருப்பதாக ஸ்டுடியோ வட்டாரங்கள் சற்றே பலமாகவே பாராட்டுகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ்… நம்பித்தான் ஆக வேண்டும்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online