MENUMENU

தங்க‌ரின் களவாடிய பொழுதுகள்

வெளியே தமிழ், கலாச்சாரம் என்று பேசும் தங்கர்பச்சானின் வீட்டில் வெஸ்டர்ன் கலாச்சாரம் வெள்ளமாக ஓடுவதாக பிரபல பத்தி‌ரிகை கிசுகிசு எழுதியுள்ளது. கிசுகிசுக்குப் பதில் கவர்ஸ்டோ‌ரியே எழுதியிருந்தாலும் தங்க‌ரின் வாய் லீவு எடுக்கப் போவதில்லை.

ச‌ரி, நம் விஷயத்துக்கு வருவோம். தங்கர்பச்சான் பல வருடங்களாக எடுத்துவரும் படம் களவாடிய பொழுதுகள். பிரகாஷ்ரா‌ஜ், பிரபுதேவா நடிக்கும் இந்தப் படத்தை ஐங்கரன் தயா‌ரிக்கிறது. ஐங்கரன் தயா‌ரித்த நந்தலாலா இன்னும் பெட்டிக்குள்தான் இருக்கிறது என்பதை இந்த இடத்தில் நினைவுகூர்வது சாலச்சிறந்தது.

நந்தலாலா நிலைமைதான் களவாடிய பொழுதுகளுக்குமா என்று கவலைப்படாதவர்கள் குறைவு. ஆனால் அப்படியெல்லாம் நடந்துவிடாது என்றே தோன்றுகிறது.

காரணம், களவாடிய பொழுதுகளின் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து கொண்டுதான் இருக்கிறது. சமீபத்தில் பிரகாஷ்ரா‌ஜ் நடித்த காட்சியை இரவு இரண்டு மணி வரை படமாக்கியிருக்கிறார் தங்கர். இந்தப் படத்தில் பூமிகா ஹீரோயினாக நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online