MENUMENU

நடிகர் பிரகாஷ்ராஜ் – சிறப்பு பேட்டி

டூயட் மூவிஸ் தயாரிப்பில் நடிகர் பிரகாஷ்ராஜ் நடிக்கும் படம் இனிது இனிது. இந்த படம் குறித்து பிரகாஷ் ராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அந்த பேட்டியில் அவர் கூறியதாவது :
* இனிது இனிது படம் குறித்து உங்களின் கருத்து….

டூயட் மூவிஸ் நல்ல தரமான படங்களை தான் எடுத்து வருகிறது. அந்‌த வரிசையில் இனிது இனிது என் மனசுக்கு ரொம்ப புடிச்ச படம்.

* நண்பர்களுடன் சேர்ந்து இந்த படத்தை எடுத்ததற்கு காரணம்….?

நண்பர்கள் எல்லோரும் என்னை கேட்கறாங்க, இளமையா இருக்கிறியே, ரொம்ப சந்தோஷமா இருக்கீங்கனு எல்லாம் கேட்கிறாங்க, அதற்கான பதில் இந்த படம் தான், எரிவதை விட, ஏற்றி வைத்தது உயர்ந்தது என்று படிச்சிருக்கோம். நண்பர்களுடன் இந்த படத்தை எடுத்ததுக்காக நான் சந்தோஷப்படுறேன்.

* இனிது இனிது படத்தில் பல புதுமுகங்களை அறிமுகம் செய்திருப்பது குறித்து….
என்னை எத்தனையோ மேடைகளில் அறிமுகப்படுத்தி வைக்க போராடியிருக்கேன், ஆனா இந்த டூயட் மூவிஸ், இந்த மேடைல பலரை அறிமுகம் செய்த வாய்ப்பு கிடைத்தது நினைத்து எனக்கு பெருமையா இருக்கு.

* ஹேப்பி டேஸ் படத்தின் ரைட்சை வாங்கியதற்கு காரணம்…..
ஐதராபாத்ல ஒரு ஸ்டூடியோல ஹேப்பி டேஸ் படத்தோட ஒரு சீன் பார்த்தேன், அப்பவே எனக்கு புடிச்சி போயிடுச்சி. அது தான் இந்த படத்தோட ரைட்ஸ் வாங்கினேன்.

* இனிது இனிது படத்திற்கு மைக்கேல் ஜே.மேயரை புக் செய்தது ஏன்?
யாருப்பா இசையமைச்சிருக்காங்கானு கேட்டேன் மைக்கேல் ஜே. மேயர் னு சொன்னாங்க, சூப்பர்ஹிட் பாடல்கள், அப்படியே தமிழக்கு அழைச்சிட்டு வந்திட்டோம்.

* ஒளிப்பதிவாளர் குகனை டைரக்டராகியது ஏன்?
குகன் பத்தி சொல்லணும்னா, மொழி படத்தில ஒளிப்பதிவு செய்தவர். ஒரு நியூ இயர் பார்டி வச்சோம், அப்ப 12 மணிக்கு குகன்கிட்ட நீ டைரக்ட் பண்றியான்னு கேட்டேன்.ராதா மோகன்கிட்ட பலதடவை சொல்லியிருக்கேன், குகன்கிட்ட நல்ல டைரக்ட் பண்ணும் திறமை இருக்குனு, அவரும் சொன்னார். ஆமாம், குகன் நிறைய படிச்சிருக்கார்னு.

* குகனின் டைரக்ஷன் பற்றி…..
இந்த ஹேப்பி டேஸ் படத்தை போட்டு காட்டினேன், அப்படியே பூ பறிக்கிறது போல, அழகாக சீன்ஸ் அமைச்சிருக்கார். 2000 மாணவர்களை இன்டர்வியூ பண்ணி , கடைசியா ஒரு டீம் அமைத்து ஒரு மாசம் பயிற்சி கொடுத்தோம், 50 புதுமுகங்களை இந்த படத்தில அறிமுகப்படுத்தியிருக்கோம், கிட்டத்தட்ட ஒரு ராட்ஸச வேலையை கொடுத்தேன் ரொம்ப சிறப்பா எடுத்து கொடுத்திருக்கிறார்.

* புது முகங்களை அதிகம் அறிமுகப்படுத்துவதால் உங்கள் இமேஜ் போகிவிடாதா…?
எனக்கு இமேஜ் மேல நம்பிக்கை இல்லை, அழகு மேல நம்பிக்கை இல்ல, அவங்க திறமை மேல நம்பிக்கை வைக்கிறவன் நான், இளைஞர்களை நம்பறவன். இந்த படத்தில நடிச்சவங்கள பார்த்தீங்கண்ணா, இவங்க எல்லாரும் முதல் படத்தில நடிச்ச மாதிரியே இல்ல, அவ்ளோ அழகா நடிச்சி கொடுத்திருக்காங்க.

* இந்த படத்தில் நீங்கள் நடிக்காததற்கு காரணம்….
நிறைய பேர் கேட்குறாங்க, இந்த படத்தில நீங்க ஏன் நடிக்கலைனு, என்னை விட இவங்க எல்லாரும் நல்லா நடிச்சிருக்காங்க, இந்த படம் என் நம்பிக்கை. புது திறமைசாலிகளை புது உயரத்துக்கு கொண்டு போற பெருமை, டூயட் மூவிசுக்கு உண்டு.

* இனிது இனிது படம் பற்றி….
இந்த படத்தில் ஒளிப்பதிவு மற்றும் இயக்கத்தை குகன் சிறப்பாக செய்திருக்கார். பாடல்களை வைரமுத்துவும், முத்துகுமாரும் எழுதியிருக்காங்க. வைரமுத்து இன்னும் இ‌ளமையாவே இருக்கார்னு அவர் எழுதித் தந்த பாட்டை வச்சி சொல்லலாம், முத்துகுமார் வரிகளும் படத்துக்கு கூடுதல் பலத்தை கூட்டியிருக்கு.

* உங்கள் திருமணம் எப்போது ?
உங்கள் எல்லார்க்கும் என் தனிப்பட்ட வாழ்க்கை திருமணம் பற்றி கேட்கணும்னு ‌கண்டிப்பா தோணும். உங்ககிட்ட எதையும் வெளிப்படையா பேசுறவன் நான், நிச்சயமா , வேறு ஒரு மேடை இதற்கான விஷயங்களை உங்கிட்ட சொல்லி சந்தோஷ‌த்தை பகிர்‌ந்துக்கிறேன்.

* இனிது இனிது எப்போது வெளியாகும் ?
ஆகஸ்ட்20, இனிது இனிது படம் ரிலீஸ், டூயட் மூவிஸ் உணர்வுள்ள பல படங்களை தந்திருக்கு, அப்பா அம்மா உறவுகளையும் சொல்லிருக்கு, இந்த படம் இளைஞர்களுக்கான படம், தமிழ் சினிமாவுக்கு இந்த பெருமையை சேர்க்க விரும்புகிறேன்.

* ஆடியோ ரிலீஸ் எப்போது ?
இனிது இனிது படம் என் வாழ்க்கையின் மிகப்பெரிய நம்பிக்கை, 4 நாள் இந்த இளைஞர்களோட சுத்த போறேன், திருச்சி, கோவை, மதுரை என்று நிறைய கல்லூரி போய் மாணவர்களை சந்தித்து, பாடல்களை ரிலீஸ் பண்ண போறேன், ‌ரொம்ப சந்தோஷமான அனுபவமா இருக்குமுனு நினைக்கிறேன்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online