MENUMENU

சல்மான்கான் ஜோடியாகும் திரிஷா

அசினும், திரிஷாவும் இந்தியில் முன்னணி நடிகைகளாக வளர்கிறார்கள்.
“கஜினி” படத்துக்கு பின் அசின் இந்தி மார்க்கெட் எகிறியது. லண்டன் டிரீம்ஸ் படத்தில் சல்மான்கானுடன் நடித்தார். தற்போது ரெடி படத்திலும் நடித்து வருகிறார்.

அசினை தொடர்ந்து திரிஷாவும் இந்தியில் வலுவாக கால் ஊன்றுகிறார். அக்ஷய்குமாருடன் நடித்து ரிலீசாகி ஓடிக் கொண்டிருக்கும் “காட்டா மீட்டா” படம் திரிஷாவுக்கு பெயர் வாங்கி கொடுத்துள்ளது.

இதையடுத்து சல்மான்கான் ஜோடியாக நடிக்க அவருக்கு வாய்ப்பு வந்துள்ளது. அக்ஷய் குமாருடன் மேலும் இரு படங்கள் நடிக்கிறார்.

சல்மான்கான் படத்துக்கான பேச்சு வார்த்தை ஆரம்ப கட்டத்தில் உள்ளது. அதிகார பூர்வமாக முடிவானதும் மும்பையில் நிரந்தரமாக தங்க முடிவு செய்துள்ளார்.

“விண்ணைத்தாண்டி வருவாயா” இந்தி ரீமேக்கிலும் திரிஷா நடிக்கிறார். தமிழில் “மன்மதன் அம்பு” படம் மூலம் கமல் ஜோடியாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. விஷால் ஜோடியாகவும் ஒரு படத்தில் நடிக்கிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online