MENUMENU

பாடல்களே இல்லாத படத்தில் நடிக்கிறார் சினேகா

நடிகை சினேகா தற்போது அஞ்சுகம் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படம், தெலுங்கில் சினேகா நடித்து வெளியான அமராவதி படத்தின் ரீமேக்காகும். இந்த படத்தில் இன்னொரு நாயகியாக பூமிகா நடித்திருந்தார்.

காதலியை மகிழ்விக்க காதலன் நடத்தும் நாடகங்களை விறுவிறுப்புடன் த்ரில்லர் கலந்து சொல்லும் கதை தான் அமராவதி. இப்படத்தை தமிழில் அஞ்சுகம் என்ற பெயரில் சதீஷ் தேவி ஸ்ரீதேவி தயாரிக்கிறார்.

ஒளிப்பதிவை சுதாகர் ரெட்டியும், இசையை சந்திராவும் செய்து வருகின்றனர். கே.ரவி வசனம் எழுதி உள்ள இந்த படத்தை ரவிபாபு இயக்குகிறார்.

சுறுசுறுப்பாக தயாராகி வரும் அஞ்சுகம் படத்தில் பாடல்களே இல்லை என்பது தான் ஹைலைட்.

இந்த படம் அடுத்த மாதம் ரிலீசாக உள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online