விழி மூடி யோசித்தால் – திரை விமர்சனம்

76a10ab7-8db3-4662-8186-7f25a84c6940_S_secvpfகல்லூரியில் படிப்பதற்காக கோவையில் இருந்து சென்னைக்கு வருகிறார் நாயகன் செந்தில் குமார். சென்னையில் தன் ஊரில் இருந்து வந்து படிக்கும் நண்பனின் வீட்டில் தங்கி கல்லூரிக்கு செல்ல முடிவு செய்கிறார். நண்பன் வீட்டின் பக்கத்து வீட்டில் இருக்கும் நாயகி நிகிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் செந்தில் குமார்.

மறுநாள் கல்லூரிக்கு செல்லும் செந்தில் அங்கு தன் வகுப்பறையிலேயே நிகிதாவை பார்க்கிறார். மேலும் இவரால் வாய் பேச முடியாது என்பதை தெரிந்துக் கொள்கிறார். நிகிதா இப்படி இருந்தும் அவரை காதலித்து வருகிறார்.

நாயகன் அம்மாவான ஊர்வசி, தன் மகனுடன் படிக்கும் மாணவர்களுக்கு போன் செய்து, செந்திலுக்கு சென்னையிலேயே ஒரு பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.

மாணவர்கள், செந்தில் இங்கு ஒரு பெண்ணை காதலித்து வருவதாக கூறுகிறார்கள். சென்னைக்கு வரும் ஊர்வசி நிகிதாவை பார்த்தவுடன் பிடித்து போகிறது. இதனால் மகன் செந்திலுக்கு நிகிதாவை திருமணம் செய்து வைக்க முடிவு செய்கிறார்.

இந்நிலையில் ஒரு தீவிரவாதி கும்பல் கொலை ஒன்றை செய்கிறார்கள். இதை நிகிதா போட்டோ எடுத்து விடுகிறார். இதையறிந்த தீவிரவாதிகள் நிகிதாவிடம் அந்த போட்டோக்கள் அடங்கிய மெமரிகார்டை கேட்கிறார்கள். ஆனால் நிகிதா அதை தர மறுக்கிறாள். இதனால் நிகிதாவை தீவிரவாத கும்பல் கொலை செய்துவிடுகிறார்கள்.

இதையறிந்து கோபமடையும் செந்தில் தீவிரவாத கும்பலை பழிவாங்கினாரா? இல்லையா? என்பதே மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் செந்தில் குமார் நடிப்பது மட்டுமின்றி இப்படத்தை இவரே இயக்கியிருக்கிறார். வழக்கமான பழிவாங்கும் கதையை வைத்து அதை வித்தியாசமான திரைக்கதை அமைத்து கொடுக்க முயற்சி செய்திருக்கிறார் இயக்குனர் செந்தில் குமார்.

செந்தில் குமார் மற்றும் நாயகியாக நடித்திருக்கும் நிகிதா ஆகியோர் புதுமுகம் என்பதால் தன்னால் முடிந்த வரை நடிக்க முயற்சி செய்திருக்கிறார்கள்.

முகமது ஆத்திப் இசையில் பாடல்கள் அனைத்தும் சுமார் ரகம். கௌபாசு, ஒளிப்பதிவில் கூடுதலாக கவனம் செலுத்தியிருக்கலாம்.

மொத்தத்தில் ‘விழி மூடி யோசித்தால்’ யோசிக்கலாம்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries