அடுத்தப் படத்தின் கதை விவாதத்திற்காக சுவிட்சர்லார்ந்து சென்றார் ஹரி

77fdf707-6b84-4c90-8365-adc6cd9b5a19_S_secvpfஹரி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘பூஜை’. இப்படத்தில் விஷால் நாயகனாக நடித்திருந்தார். இவருக்கு ஜோடியாக சுருதி ஹாசன் நடித்திருந்தார். மேலும் இதில் ராதிகா, ஜெயபிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹரி, சூர்யாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவுள்ளார். இப்படத்தின் கதை விவாதத்திற்காக தன் உதவியாளர்களுடன் சுவிட்சர்லாந்து சென்றுள்ளார். ஏற்கனவே சூர்யா-ஹரி இயக்கத்தில் வெளிவந்த ‘ஆறு’, ‘வேல்’, ‘சிங்கம்’, ‘சிங்கம் 2’ ஆகிய படங்கள் வெற்றியடைந்து வசூலிலும் சாதனை படைத்தது.

சூர்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கி வரும் ‘மாஸ்’ படத்தில் நயன்தாரா, எமிஜாக்சனுடன் இணைந்து நடித்து வருகிறார். அதன்பிறகு விக்ரம் குமார் இயக்கவிருக்கும் 24 படத்தில் நடிக்கவிருக்கிறார். அதன்பிறகு ஹரிவுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries