ஆர்யா-ராஜேஷ் இணையும் புதிய படம் தொடங்கியது

3aebb423-74ef-42e1-9546-5f27be3bb16c_S_secvpfவெற்றி பெற்ற படங்களின் கூட்டணி மீண்டும் இணைவது வர்த்தக ரீதியில் மட்டுமின்றி, ரசிகர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி தரும் விஷயமாகும். அந்த வகையில் ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் மூலம் ரசிகர்களை பெரிய அளவில் கவர்ந்த ஆர்யா, சந்தானம், இயக்குனர் ராஜேஷ் கூட்டணி மீண்டும் புதிய படம் மூலம் இணைகின்றனர்.

இப்படத்தை ஆர்யாவின் சொந்த பட நிறுவனமான ‘தி ஷோ பீபல்’ என்ற நிறுவனம் தயாரிக்கின்றது. காதல் நகைச்சுவை மற்றும் இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்த படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக தமன்னா நடிக்கவுள்ளார்.

இவர்கள் இருவரும் ஜோடியாக நடிப்பது இதுவே முதல் தடவையாகும். இயக்குனர் ராஜேஷின் படங்களில் மையமாக விளங்கும் சந்தானம் இந்த படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடிக்க உள்ளார்.

மேலும் இப்படத்தில் ‘தாமிரபரணி’ படத்தில் கதாநாயகியாக நடித்த முக்தா பானு, வெண்ணிற ஆடை மூர்த்தி, ரேணுகா, கருணாகரன், சித்தார்த் விபின், வித்யு லேகா, மற்றும் பலர் நடிக்க உள்ளனர். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்ய இருக்கும் இப்படத்திற்கு இமான் இசை அமைக்க உள்ளார். இந்தப்படம் சென்னையில் நேற்று பூஜையுடன் துவங்கியது.

“வெறுமனே சிரித்துவிட்டு வரக்கூடிய படமாக இருக்காது. சிந்திக்க மற்றும் சிரிக்க வைக்கும் கதையின் கரு, கண் கவரும் நேர்த்தியான ஒளிப்பதிவு மற்றும் செவிக்கினிய இசை என்று படத்தின் வெற்றிக்கு தேவையான அதனை அம்சங்களும் இந்த படத்தில் இருக்கும்.

ஆர்யா- சந்தானம்- மற்றும் என்னுடைய கூட்டணியில் வெளிவந்த எங்களது முந்தைய படமான ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்தின் வெற்றியையும் தரத்தையும் இந்த படத்திலும் தருவோம்” என்று நம்பிக்கையோடு இயக்குனர் ராஜேஷ் கூறுகிறார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries