திருட்டு வி.சி.டி.யை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன்: விஷால்

9bbe66e7-6d10-4eb2-b1a0-fc5cffbae5a0_S_secvpfபத்திரிக்கையாளர்கள் நலச்சங்கம் சார்பில் கோவை புலிய குளத்தில் பேனாவும், கானாவும் என்ற நட்சத்திர கலை விழா நடைபெற்றது.

இதில் திரைப்பட நடிகரும், தயாரிப்பாளருமான விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

நடிகர் சங்க கூட்டத்தை வருகிற 30–ந் தேதி கூட்டி என்னை விலக்குவதாக கூறியுள்ளனர். தென் இந்திய நடிகர் சங்கம் குறித்து நான் தவறாக பேசியதாக நிரூபித்தால் நடிகர் சங்கத்தை விட்டு சென்று விடுவேன்.

நான் என்ன தவறு செய்தேன்? என்பதை நிரூபிக்க வேண்டும். என்னை பற்றி அவதூறாக பேசிய ராதாரவி மற்றும் காளை ஆகியோரைத்தான் நடிகர் சங்கத்தில் இருந்து முதலில் நீக்க வேண்டும். அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக 2015–ம் ஆண்டு நடைபெற இருக்கும் நடிகர்கள் சங்க தேர்தலில் போட்டியிட போகிறேன். தலைவர், செயலாளர் பதவிகளில் எந்த பதவிக்கு போட்டியிடுகிறேன் என்பதை பிறகு அறிவிப்பேன்.

வெற்றி, தோல்வி என்பது முக்கியமல்ல. இளம் தலைமுறை நடிகர்கள் சங்கத்தில் பொறுப்பேற்று திறம்பட செயல்பட ஆர்வமாக உள்ளனர். விரைவில் மாற்றம் வரும் என எதிர்பார்க்கிறோம். திருட்டு வி.சி.டி.யை தடுக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவேன் என்றார்.

தொடர்ந்து நடைபெற்ற விழாவில் ஜெர்னலிஸ்ட் வெல்பேர் அசோசியன் தலைவர் நந்தகுமார் தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜ் வரவேற்று பேசினார். மருதாசலம், சீனிவாசன், காமராஜ் ஆகியோர் முன்னிலை வகிக்கித்தனர்.

புதுச்சேரி மாநில நுகர்வோர் ஆணைய தலைவர் நீதிபதி வெங்கட்ராமன் பத்திரிக்கையாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வாழ்த்தி பேசினார். நடிகர் பாண்டு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். பாடகர் கானா பாலா, கானா பாடல்களை பாடி ரசிகர்களை மகிழ்வித்தார்.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online