உதவி இயக்குனர்களை மேடையேற்றி பாராட்டிய பிந்து மாதவி

ee77895e-18fb-453d-90a5-b6d510eb5347_S_secvpfசெல்போனை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள படம் ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், நகுல், பிந்து மாதவி, ஐஸ்வர்யா தத்தா, சதீஷ், ஊர்வசி, மனோபாலா ஆகியோர் நடித்திருக்கின்றனர்.

இப்படக்குழுவினரின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அப்போது பிந்து மாதவி பேசும்போது,

இந்தப் படத்தில் தான் சிறப்பாக நடிப்பதற்கு இயக்குனர் மற்றும் துணை இயக்குனர்கள் பெரிய அளவில் உதவி புரிந்ததாகக் கூறினார். மேலும், ஒவ்வொரு துணை இயக்குனரின் பெயரையும் வாசித்து அவர்களை மேடைக்கு அழைத்தார். மேடையேறிய அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.

மேலும், இப்படத்தில் நடித்திருக்கும் நகுலை ஏற்கனவே தனக்குத் தெரியும் என்று கூறிய பிந்து மாதவி, நகுலுடன் இப்படத்தில் முதல் முறையாக இணைந்து நடிப்பதாக குறிப்பிட்டார்.

துணை இயக்குனர்களை மேடையேற்றி பாராட்டிய பிந்து மாதவியின் அணுகுமுறையை அனைவரும் பாராட்டினர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries