ரஜினியின் லிங்கா படத்துக்கு யு சான்றிதழ் கிடைக்குமா?

12162373-80a8-414b-b69a-1540b4174873_S_secvpfரஜினியின் ‘லிங்கா’ படம் இன்று தணிக்கையாகிறது.

அடுத்த மாதம் (டிசம்பர்) 12–ந்தேதி ரஜினி பிறந்த நாளையொட்டி ‘லிங்கா’ படத்தை வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன. இதற்காக டப்பிங் ரீ ரிக்கார்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளன.

இதற்கிடையே, படத்தை தணிக்கை குழுவினர் பார்ப்பதற்காக இன்று அனுப்பி வைக்கப்படுகிறது. தணிக்கை குழு அதிகாரிகளும் உறுப்பினர்களும் படத்தை பார்க்கின்றனர். படத்துக்கு ‘யு’ சான்றிதழ் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் படக்குழுவினர் உள்ளனர். ‘யு’ சான்று கிடைத்தால்தான் அரசின் கேளிக்கைவரி விலக்கை பெற முடியும்.

இதில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா வருகிறார்கள். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். அணைக்கட்டு சர்ச்சையை மையமாக வைத்து இப்படம் தயாராகியுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries