ரஜினிகாந்த் மீது ரசிகர் பட்டாளம் வைத்திருக்கும் அன்பு: நெதர்லாந்து தயாரிப்பாளர் குறும்படமாக எடுக்கிறார்

6be07d61-b240-422d-864b-da52535a621d_S_secvpfசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மீது தமிழ்நாட்டு ரசிகர்கள் வைத்திருக்கும் அன்பு, அவர் உடல்நிலை சரியில்லாமல் வெளிநாட்டு சிகிச்சைக்கு சென்றபோது, அவர்கள் தவித்த தவிப்பு போன்றவற்றை மையமாக வைத்து நெதர்லாந்து நாட்டைச் சேர்ந்த ரிங்கு கால்ஸி என்ற பெண் தயாரிப்பாளர் குறும்படம் ஒன்றை தயாரிக்க திட்டமிட்டுள்ளார்.

இதற்காக, தமிழகத்தில் உள்ள ரஜினி ரசிகர்களின் உணர்வுகளை சுமார் 4 ஆண்டுகாலமாக நெருக்கத்தில் இருந்து பார்த்து அறிந்து வைத்துள்ளேன். அதிலிருந்து நானும் அவரது தீவிர ரசிகையாகி விட்டேன் என்று கூறும் இவர், பல விழாக்களில் ரஜினியை நேரில் பார்த்திருந்தாலும், இதுவரை அவரை சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கவில்லை என்றும் தெரிவித்தார்.

’ஒரு மனிதரின் அன்புக்காக’ என்ற பெயரில் தயாராகும் இந்த குறும்படம், 2015- பிப்ரவரியில் உலகளாவிய அளவில் திரையிடப்பட்டும். அதற்கு முன்னதாக, படப்பிடிப்பு முடிவடைந்ததும் ரஜினிக்கு இந்த படத்தை திரையிட்டு காட்டவும் விரும்புகிறோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries