விஜய் படத்தில் சண்டை காட்சிகளை அமைக்கும் ஹாலிவுட் ஸ்டண்ட் மாஸ்டர் சாங் லின்

0f1a3b89-704c-45b6-82d7-ea76572ad356_S_secvpfசினிமா ரசிகர்கள் மத்தியில் கத்தி பற்றிய செய்திகள் இன்னும் உலா வந்து கொண்டிருக்கும் நிலையில், சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் புதிய படமான “விஜய் 58” பற்றிய செய்திகள் விஜய் ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தியுள்ளது.

இப்படத்தில் விஜய்யுடன், ஹன்சிகா, சுருதிஹாசன், சுதீப் ஆகிய பெரிய நட்சத்திரங்கள் நடித்துவரும் வேளையில், 1980-களில் தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாக விளங்கிய நடிகை ஸ்ரீதேவியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது இப்படத்தை பற்றிய மேலும் ஒரு சுவாரஸ்யமான தகவல் வெளியாகியுள்ளது.

“டிரான்ஸ்போர்டர்” என்ற தலைப்புகளில் வெளிவந்த ஹாலிவுட் படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றிய சீனாவை சேர்ந்த சாங் லின் இப்படத்திற்கு சண்டை காட்சிகளை அமைக்கிறார்.

இவர் தவிர சர்வதேச அளவில் புகழ்பெற்ற சென்னையை சேர்ந்த திலீப் சுப்பராயன், தாய்லாந்தை சேர்ந்த பிரடிட் சீலுவம் மற்றும் மும்பையை சேர்ந்த சுனில் ரோட்ரிகஸ் ஆகிய ஸ்டண்ட் மாஸ்டர்களும் இப்படத்தில் பணியாற்றுகின்றனர்.

விஜய் ரசிகர்களுக்கு தீனி போடும் வகையில் ஹாலிவுட் பாணியில் பொறி பறக்கும் ஆறு சண்டைக்காட்சிகள் இப்படத்தில் அமையவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Post your comment

மேலும் சில பரிந்துரைகள்

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries