தூய்மை இந்தியா திட்டம்: குப்பை அள்ளிய அமிதாப்–ஹிருத்திக், பிரியங்கா சோப்ரா

ca6c2099-c6c7-4c46-8685-7dfb91002b63_S_secvpfபிரதமர் நரேந்திரமோடி தூய்மை இந்தியா திட்டத்தை அறிமுகப்படுத்தி பிரபலங்களுக்கு அழைப்பு விடுத்தார். இதனை ஏற்று நடிகர் நடிகைகள் தெருக்களை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

நடிகர் கமலஹாசன் சமீபத்தில் சென்னை அருகே உள்ள மாடம் பாக்கம் ஏரியை சுத்தப்படுத்தினார். ஏரிகரையோரம் கிடந்த குப்பைகளை அள்ளினார். கமல் ரசிகர்களும் இப்பணியில் ஈடுபட்டனர்.

நடிகை சமந்தா ஐதராபாத்தில் உள்ள அரசு பள்ளிக் கூடத்துக்கு சென்று அங்கு கிடந்த குப்பைகளை அள்ளினார்.

தெலுங்கு நடிகர்கள் நாகார்ஜுனா, மோகன் பாபு உள்ளிட்டோரும் தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்து தெருக்களில் கிடந்த குப்பைகளை கூட்டி சுத்தம் செய்தார்கள்.

இது போல் இந்தி நடிகர்கள் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன், நடிகை பிரியங்கா சோப்ரா போன்றோரும் மும்பையில் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

மூவரும் துடைப்பத்துடன் தெருத்தெருவாக சென்று குப்பைகளை கூட்டினார்கள். பிறகு அவற்றை கூடையில் அள்ளி குப்பைத் தொட்டியில் கொண்டு போய் கொட்டினார்கள்.

இவர்களுடன் தொண்டு நிறுவனங்களை சேர்ந்தவர்களும் குப்பை அள்ளினார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries