சூர்யா படத்தில் சுருதி, எமிஜாக்சனுடன் நடிக்க நயன்தாரா மறுப்பு?

aa248a60-d8ee-4444-a7dd-9b71c901020d_S_secvpfவெங்கட் பிரபு இயக்கும் மாஸ் படத்தில் சூர்யா நடிக்கிறார். இதில் நாயகியாக நயன்தாரா நடிக்கிறார். இன்னொரு நாயகியாக நடிக்க சுருதி ஹாசனை முதலில் தேர்வு செய்தனர். பிறகு திடீரென அவரை நீக்கி விட்டு எமிஜாக்சனை ஒப்பந்தம் செய்தார்கள்.

இப்போது அவரும் நீக்கப்பட்டுள்ளார். புதிதாக ப்ரணிதாவை தேர்வு செய்துள்ளனர். சகுனி படத்தில் கார்த்தி ஜோடியாக நடித்தவர் பிறகு தமிழ் பட வாய்ப்புகள் கிட்டாததால் தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். நீண்ட இடைவெளிக்கு பிறகு மாஸ் படம் மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

சுருதி ஹாசன், எமி ஜாக்சன் மாற்றப்பட்டதற்கு நயன்தாரா தான் காரணம் என கிசுகிசுக்கப்படுகிறது. சுருதிஹாசனை ஒப்பந்தம் செய்த போது அவர் வேண்டாம் என்று டைரக்டரிடம் நயன்தாரா கூறினார் என்கின்றனர். அவருக்கு பதில் எமிஜாக்சன் தேர்வு செய்யப்பட்டதும் நயன்தாராவுக்கு பிடிக்க வில்லையாம். எமிஜாக்சன் கவர்ச்சியில் தாராளம் காட்டுகிறார்.

விக்ரமுடன் ஐ படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அவரோடு நடிப்பது தனக்கு சவுகரியமாக இருக்கிறது என்று நயன்தாரா கூறினாராம். இதனால் அவரும் மாற்றப்பட்டு இப்போது ப்ரணிதா வந்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries