உதயநிதி ஸ்டாலினின் தாய்மாமன் பையன் ரக்ஷன் நடிக்கும் படம் ‘திருட்டு ரெயில்’. இதில் மற்றொரு நாயகனாக சரண் செல்வம் நடிக்கிறார். இப்படத்தில் நாயகியாக கேத்தி நடித்து வருகிறார். மேலும் இதில் செண்ட்ராயன், ரவிக்குமார், இமான் அண்ணாச்சி, மயில்சாமி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். ஜெய் பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்தை திருப்பதி இயக்குகிறார். எஸ்.எஸ்.எஸ். மூவிஸ் சலீம் மற்றும் அனு மூவிஸ் பி.ரவிக்குமார் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றனர்.
தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் நண்பர்கள் திருட்டு ரெயிலில் சென்னைக்கு செல்லும் சூழ்நிலை ஏற்படுகிறது. சென்னையில் அதை விட பெரிய பிரச்சனை அவர்களுக்கு காத்திருக்கிறது. இதிலிருந்து அவர்கள் மீண்டார்களா என்பதை காமெடி கதையாக உருவாக்கி வருகிறார்கள்.
இப்படத்தின் படப்பிடிப்பு நாகர்கோவில், ஆந்திரா, சென்னையின் புறநகர் பகுதிகளில் 38 நாட்கள் நடந்துள்ளது. டிசம்பர் மாதம் இப்படத்தின் பாடல்களை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.