அஜீத் படத்திற்காக ரிகர்சலில் ஈடுபடும் திரிஷா

2d5143b0-69da-4d44-9db4-63e46bcd278c_S_secvpfகவுதம் மேனன் இயக்கி வரும் ‘என்னை அறிந்தால்’ படத்தில் அஜீத் தற்போது நடித்து வருகிறார். இதில் இவருக்கு ஜோடியாக அனுஷ்கா மற்றும் திரிஷா நடித்து வருகிறார்கள். மேலும் இவர்களுடன் விவேக், அருண் விஜய், தலைவாசல் விஜய் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஹாரிஸ் ஜெயராஜ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். டான் மெகதூர் ஒளிப்பதிவை செய்து வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டது. இது ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருகிறது. விறுவிறுப்பாக நடந்து வரும் இதன் படப்பிடிப்பு தற்போது இறுதி கட்டத்தை எட்டி வருகிறது.

இப்படத்தில் திரிஷாவிற்கு சோலோ பாடல் ஒன்றை அமைத்திருக்கிறார்கள். அதற்காக திரிஷா ரிகர்சலில் ஈடுபட்டு வருகிறார்.

இதுகுறித்து டுவிட்டரில் திரிஷா, என்னை அறிந்தால் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் இருக்கிறோம். இதில் இடம் பெறும் சோலோ பாடலுக்காக என்னுடைய டார்லிங் பிருந்தா மாஸ்டருடன் ரிகர்சலில் ஈடுபட்டிருக்கிறேன். நான் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries