விசாகப்பட்டினம் புயல் நிவாரணத்துக்கு நிதி திரட்டும் கமல், ஸ்ரேயா

6795e43d-5f64-4f5c-bfd3-59628da630bd_S_secvpfவிசாகப்பட்டினத்தில் சமீபத்தில் வீசிய ‘ஹூட் ஹூட்’ புயல் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. தமிழ், தெலுங்கு படப்பிடிப்புகள் பெருமளவு இந்த பகுதியில்தான் நடந்தது.

இதனால் திரையுலகினர்கள் வேதனை அடைந்தனர். புயல் பாதித்த பகுதிகளில் நிதி நிவாரண நடவடிக்கைகளை முடுக்கி விட நடிகர், நடிகைகளும் தீவிரம் காட்டி வருகிறார்கள். ஏற்கனவே புயல் நிவாரணத்துக்காக தெலுங்கு நடிகர்கள் நிதி வழங்கினர்.

கமல், விஜய், சூர்யா, விஷால், கார்த்தி உள்ளிட்ட தமிழ் நடிகர்களும் நிதி உதவி அளித்தார்கள்.

மேலும் நிதி திரட்டுவதற்காக தெலுங்கு பட உலகினர் நட்சத்திர கலை விழாவுக்கு ஏற்பாடு செய்து இருக்கிறார்கள். இந்த விழா நாளை ஐதராபாத்தில் நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் கமலஹாசன் பங்கேற்கிறார்.

நடிகர், நடிகைகளின் நடன நிகழ்ச்சியும் நடக்கிறது. ஸ்ரேயா ‘வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி’ என்ற பாட்டுக்கு நடனம் ஆடுகிறார். தமிழ், தெலுங்கு பாடல்களுக்கு நடிகர், நடிகைகள் நடனம் ஆட உள்ளனர். நாடகம், பாடல், இசை போன்ற நிகழ்ச்சிகளும் நடக்கிறது. முன்னணி பாடகர்கள் பங்கேற்று பாடுகின்றனர். நடிகர், நடிகைகள் நாடகமும் நடக்கிறது.

ரஜினிகாந்த், சூர்யா, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் போன்றோருக்கும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அத்துடன் கிரிக்கெட், கபடி போட்டிகள், பேஷன் ஷோ போன்றவற்றையும் நடத்தி நிதி திரட்டுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries