காமெடியாக தயாராகும் திருட்டு ரயில்

1417170174-7401ஐந்து இளைஞர்களும் ஒரு போலீஸும் என்பதுதான் இந்தப் படத்துக்கு சரியான பெயராக இருக்கும். கதை அப்படி. தூத்துக்குடியில் ஐந்து இளைஞர்களுக்கும் ஒரு போலீஸ் அதிகாரிக்கும் மோதல் ஏற்படுகிறது. அதை சமாளிக்க முடியாமல் சென்னைக்கு ஐவரும் திருட்டு ரயில் ஏறுகிறார்கள் (டைட்டில் வந்திடுச்சா?)

வாணலுக்கு பயந்து அடுப்பில் விழுந்த கதையாக சென்னையில் அதைவிட பெரிய பிரச்சனையில் மாட்டிக் கொள்கிறார்கள். அது என்ன பிரச்சனை, அதிலிருந்து எப்படி தப்பித்தார்கள் என்பதை காமெடியுடன் சொல்வதுதான் திருட்டு ரயில்.

திருப்பதி என்பவர் இயக்க ரக்ஷன், சரண் செல்வம், செண்ட்ராயன், ரவிக்குமார், இமான் அண்ணாச்சி, மயில்சாமி உள்பட பலர் இதில் நடித்துள்ளனர். கேத்தி என்பவர் ஹீரோயின்.

எஸ்.எஸ்.எஸ்.மூவிஸ் சலீம், அனு மூவிஸ் ரவிக்குமார் இணைந்து படத்தை தயாரித்து வருகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries