இந்த வருடமும் சிம்பு படம் ரீலிஸ் இல்லை: வாலு, இது நம்ம ஆளு அடுத்த வருடம் வெளியாகிறது

ce4f77e7-e494-4101-9ee3-b6532391661c_S_secvpfசிம்பு நடிப்பில் இரண்டு படங்கள் முடியும் தருவாயில் உள்ளது. ஒன்று வாலு, மற்றொன்று இது நம்ம ஆளு. வாலு படத்தில் சிம்புவுடன் ஹன்சிகா மோத்வானி நடித்துள்ளார். இந்த படத்தை விஜயசந்தர் இயக்க, தமன் இசையமைக்கிறார்.

இந்த படம் அடுத்த மாதம் 24-ந்தேதி ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் இந்தப் படம் அடுத்த வருடம் தான் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதை சிம்புவும் உறுதி செய்துள்ளார். இது குறித்து அவர் கூறும்போது ‘‘ஒரு நடிகராக இருந்து ஒரு படத்தில் நடிப்பதும், சில இடங்களில் ஆலோசனையை கூறுவதும் என்னுடைய வேலை. வியாபாரம் தொடர்பான விவகாரம் மற்றும் வினியோகஸ்தர் விவாகரத்தில் தலையிடுவதில்லை.

என்னுடைய ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்ற முடியவில்லை என்பது எனக்கு ஏமாற்றம் தான். 2015-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் வாலு படமும், இது நம்ம ஆளு படம் கோடைகால மத்தியிலும் வெளியாகும்’’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries