பிரசாந்த் படத்திற்கு பாட்டு பாடிய லட்சுமி மேனன்

1a1d6749-4b32-42ef-83ce-5e16b44d06eb_S_secvpfபிரசாந்த் தற்போது ‘சாஹசம்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக முன்னணி நடிகை நடித்து வருகிறார். இப்படத்தை அருண் ராஜ் வர்மா இயக்கி வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு டெல்லி, மும்பை, சென்னை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

ஸ்டார் மூவிஸ் சார்பில் தியாகராஜன் இப்படத்தை தயாரித்து வருகிறார். இப்படம் 2015-ல் திரைக்கு வரவிருக்கிறது. இப்படத்திற்கு தமன் இசையமைத்து வருகிறார். 5 பாடல்கள் உள்ள இப்படத்தில் இந்தியாவின் முன்னணி பாடகர்களான சங்கர் மகாதேவன், ஸ்ரேயா கோஷல் மற்றும் மோஹித் ஆகியோர் பாடியுள்ளார்கள். தற்போது இப்படத்தில் லட்சுமி மேனன் ஒரு பாடல் பாடியுள்ளார். மதன் கார்க்கியின் பாடல் வரிகளுக்கு லட்சுமி மேனன் பாடிய பாடல் சிறப்பாக வந்திருக்கிறதாம்.

லட்சுமி மேனன் ஏற்கனவே விமல் நடிப்பில் வெளியான ‘ஒரு ஊர்ல இரண்டு ராஜா’ படத்தில் இமான் இசையில் வெளிவந்த ‘குக்குறு குக்குறு…’ என்ற பாடலை பாடியுள்ளார். தற்போது இரண்டாவது பாடலை பாடியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries