விஷாலுடன் இணையும் காஜல் அகர்வால்?

b3536dfe-09aa-4dd7-be05-7434878b988e_S_secvpfசுசீந்திரன் இயக்கத்தில் விஷால், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான ‘பாண்டிய நாடு’ படம் வெற்றி பெற்றது. இந்த வெற்றியைத் தொடர்ந்து விஷால்- லட்சுமி மேனன் ஜோடி ‘நான் சிகப்பு மனிதன்’ படத்திலும் தொடர்ந்தது. அந்த படம் வெற்றி பெறவே சுசீந்திரன் இயக்கும் புதிய படத்தில் 3-வது முறையாக இவர்கள் இணைய இருந்தார்கள்.

தற்போது இந்த படத்தில் இருந்து லட்சுமி மேனன் விலகியதாக தெரிகிறது. அவருக்குப் பதிலாக காஜல் அகர்வால் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என கூறப்படுகிறது.

படித்துக் கொண்டிருக்குபோதே சினிமாவிற்கு வந்ததால் பிளஸ் 2 படிப்பை லட்சுமி மேனனால் தொடர முடியவில்லை. தற்போது ஏப்ரல் மாதம் நடைபெற இருக்கும் பிளஸ் 2 தேர்வை எழுத இருக்கிறார். இதற்காக ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் தேதி கொடுக்க லட்சுமி மேனனுக்கு மனமில்லை. இதனால் காஜல் அகர்வால் ஒப்பந்தம் செய்யப்பட்டதாக தெரிகிறது.

துப்பாக்கி, ஜில்லா படத்திற்குப் பிறகு காஜல் அகர்வால் தனுசுடன் ‘மாரி’ என்ற படத்தில் மட்டுமே ஒப்பந்தம் ஆகியுள்ளார். தெலுங்கிலும் அதிக அளவு படங்கள் இல்லாததால் உடனே இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார்.

வேந்தர் மூவிஸ் தயாரிப்பில், இமான் இசையில் இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries