மணிமாறனின் புகழ் படத்தில் ஆக்சன் வேடத்தில் நடிக்கிறார் ஜெய்

8cae1ca1-82e9-491c-96bd-091e424ff24f_S_secvpfசென்னை 600 028, சுப்ரமணியபுரம், கோவா, எங்கேயும் எப்போதும், நவீன சரஸ்வதி சபதம், திருமணம் என்னும் நிக்காஹ், ராஜா ராணி போன்ற படங்களில் நடித்தவர் ஜெய். இவர் ‘உதயம் என்.எச்.4’ படத்தை இயக்கிய மணிமாறன் இயக்கும் ‘புகழ்’ படத்தில் நடிக்கிறார். இதில் ஆக்சன் காதாபாத்திரத்தில் நடிக்கிறார் ஜெய்.

இதுகுறித்து மணிமாறன் கூறும்போது ‘‘இதுவரை சராசரியான வாலிபன், அப்பாவியான கதாபாத்திரங்களில் நடித்த ஜெய் இந்த படத்தில் ஆக்சன் வேடம் ஏற்று நடிக்க இருக்கிறார். இது ஒரு ஆக்சன் மற்றும் த்ரில்லர் கலந்த படமாக இருக்கும்.

கதாநாயகிக்கான தேர்வு நடைபெறும்போது பல்வேறு பெயர்கள் பரிசீலனையில் இருந்தது. ஆனால் இறுதியில் அந்த பாத்திரத்துக்கு தேர்வு செய்யப்பட்டவர் ‘இவன் வேற மாதிரி’ படத்தில் நடித்த சுரபிதான். அவர் அந்த பாத்திரத்துக்கு மிகச் சரியான தேர்வு எனக் கூறலாம்.

‘புகழ்’ படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து, நேற்று இரண்டாம் கட்ட படப்பிடிப்பு துவங்கி உள்ளது. வெற்றி வேண்டும் என முனைப்போடு செயல்படுகிறோம்’’ என்று மணிமாறன் கூறினார்.

தயாரிப்பாளர் சுஷாந்த் இந்த படத்தைப் பற்றி கூறும்போது, ‘‘நம் வாழ்வில் எப்போதும் வாய்ப்பில்லை என கருதப்படுபவர், ஜெயிக்க வேண்டும் என ஆசை படுவதுண்டு.

அவர்களின் வெற்றியில் நாம் நம்மை காண விழைவது உண்டு. ‘புகழ்’ வாழ்வில் நாம் சந்திக்கும் அத்தகைய ஒரு நபரை பற்றிய கதை. கதாநாயகன் ஜெய் மற்றும் மற்றும் இயக்குனர் மணிமாறன் அந்த உணர்வுகளை பிரமாதமாக வெளிப்படுத்தி உள்ளார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries