ஜப்பானில் உருவாகிவரும் ஜம்போ 3டி

4e03ffdc-be8b-4cdc-a7ce-bb855fe09aa6_S_secvpfசமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஆ’. இதில் கோகுல், பாபி சிம்ஹா, பாலா, மேக்னா நடித்திருந்தார்கள். ஹரி-ஹரிஷ் என்னும் இரட்டையர்கள் இப்படத்தை இயக்கியிருந்தார்கள். ஆ படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் இயக்கும் புதிய படம் ‘ஜம்போ 3டி’.

எம்.எஸ்.ஜி மூவீஸ் சார்பில் ஜி.ஹரி மற்றும் ஜப்பானை சேர்ந்த ஓகிடா ஆகியோர் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படம் பெரும்பாலும் ஜப்பானில் படமாக்கப்பட்டுள்ளது.

‘ஆ’ திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்த படத்தில் கோகுல் மீண்டும் கதாநாயகன் வேடத்தில் நடிக்கிறார். இவருடன் சுகன்யா, பேபி ஹம்சிகா, அஞ்சனா, லொள்ளுசபா ஜீவா, ஈரோடு மகேஷ், யோக் ஜப்பீ மற்றும் ‘கும்கி’ அஷ்வின் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஜம்போ என்ற ஜம்புலிங்கம் ஆக வரும் கோகுல், மைம்-ஸ்லாப்ஸ்டிக் எனும் நகைச்சுவை நடிப்பு பாணியை கையாண்டு இருக்கிறார். படத்தில் பேபி ஹம்சிகா துடுக்கான குழந்தை கதாபாத்திரத்தில் நன்கு நடித்துள்ளார்.

இப்படம், குழந்தைகளை கவரக்கூடியதாய் அமையும். 100க்கும் மேற்பட்ட ஜப்பானியர்கள் நடித்துள்ள இப்படம் ஜப்பானில் 40 நாட்கள் படமாக்கப்பட்டுள்ளது.” என்கின்றனர் ஹரி-ஹரிஷ் இரட்டையர்கள்.

ஜப்பானியர்கள் நடித்துள்ளதால் இப்படத்தை ஜப்பானிலும் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள். இப்படம் முழுக்க முழுக்க ஜப்பானின் அழகுமிகு நகரங்களில் படமாக்கப்பட்டுள்ளது. அது மட்டும் இல்லாமல் ஜப்பானிய கலாச்சாரத்தை இந்திய மக்கள் அறியும் வகையிலும் உருவாக்கி வருகிறார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries