விஜய் சேதுபதி-நயன்தாராவுடன் இணைந்து நடிக்கும் ராதிகா

00a96a29-5ada-42c1-b4ff-6faee5a32a30_S_secvpfதனுஷ் தனது ‘வுண்டர்பார்’ நிறுவனம் மூலம் விஜய் சேதுபதியை வைத்து ‘நானும் ரௌடிதான்’ என்ற படத்தை தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.

இப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு தற்போது பாண்டிச்சேரியில் நடைபெற்று வருகிறது. மேலும் சென்னையின் முக்கிய இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜார்ஜ் வில்லியம்ஸ் ஒளிப்பதிவை செய்து வருகிறார். தற்போது ‘நானும் ரௌடிதான்’ படக்குழுவினருடன் ராதிகா இணைந்துள்ளார்.

இதைப்பற்றி ராதிகா கூறும்போது, ‘நானும் ரௌடிதான்’ படக்குழுவினருடன் பாண்டிச்சேரியில் தாடி மீசை இல்லாத விஜய் சேதுபதி மற்றும் அழகான நயன்தாரா மற்றும் திறமையான விக்னேஷ் சிவனுடன் நானும் இணைந்திருக்கிறேன் என்றார். இதற்கு விக்னேஷ் சிவன், நீங்கள் மிகவும் இளமையாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறீர்கள், இந்த குழுவில் நீங்கள் இருப்பது எங்களுக்கு சந்தோஷமாகவும் பெருமையாகவும் உள்ளது. மிகவும் நன்றி எனவும் கூறியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries