ஒரே தியேட்டரில் தொடர்ந்து ஆயிரம் வாரங்கள் ஓடி ஷாருக்கானின் தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே சாதனை

4f7d7496-3b3c-4a89-9f01-42d0df12804e_S_secvpfஷாருக்கான், கஜோல், அனுபம் கெர், கரண் ஜோஹர் ஆகியோரின் நடிப்பில் அறிமுக இயக்குனரான ஆதித்யா சோப்ரா இயக்கிய காதல் படம் ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ (துணிச்சல் உள்ளவன் மணமகளை தூக்கிச் செல்வான் என்பது இந்த தலைப்பின் தமிழ்ப் பொருளாகும்).

காதல் ரசம் சொட்டும் அருமையான கதையம்சம், செவிக்கினிய பாடல்கள், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகள் போன்றவற்றால் 1995-ம் ஆண்டு வெளியான இந்தப் படம் ‘சூப்பர் டூப்பர்’ ஹிட்டாகி வசூலை அள்ளிக் குவித்தது. இந்தியாவையும் கடந்து ஷாருக்கானின் புகழ் வெளிநாடுகளிலும் பரவ இந்தப் படத்தின் வெற்றி மிகப்பெரிய காரணமாக அமைந்தது.

ரசிகர்களின் வேண்டுகோளின்படி, ரிலீஸ் செய்யப்பட்ட நாளில் இருந்து மும்பையில் உள்ள ‘மராத்தா அந்திர்’ தியேட்டரில் இந்தப் படம் கடந்த 19 ஆண்டுகளாக தொடர்ந்து திரையிடப்பட்டு வருகிறது. இந்நிலையில், இன்றுடன் (வெள்ளிக்கிழமை) வெற்றிகரமாக ஆயிரமாவது வாரத்தை கடந்து ‘தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே’ தொடர்ந்து ஓடிக் கொண்டுள்ளது.

இதற்கு முந்தைய பல படங்களின் சாதனைகளை எல்லாம் ஷாருக்கானின் இந்த சாதனை தகர்த்து விட்டதாக அவரது ரசிகர்கள் பெருமிதத்துடன் கூறினர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online