லிங்கா படம் திரையிடப்பட்ட சென்னை தியேட்டர்களில் ரசிகர்கள் திருவிழா கோலம்

d4ee4227-7011-487a-a45f-9c620ef2b398_S_secvpf‘லிங்கா’ படம் திரையிடப்பட்ட சென்னை தியேட்டர்களில் ரசிகர்கள் ரஜினி பிறந்த நாளை கொண்டாடினார்கள். * நடிகர் ரஜினிகாந்துக்கு இன்று 64–வது பிறந்த நாள். இன்றைய தினம் அவர் நடித்த ‘லிங்கா’ படமும் திரையிடப்பட்டது.

* ரஜினியின் சினிமா வாழ்க்கையில் அவர் பிறந்த நாளில் அவர் நடித்த புதுப்படம் வெளியாவது இதுவே முதல் முறையாகும்.

* அதிகாலை 1 மணிக்கு ‘லிங்கா’ படத்தின் முதல் காட்சி சென்னை தியேட்டர்களில் திரையிடப்பட்டது.

* ரசிகர்கள் நள்ளிரவு முதலே கடும் குளிரையும், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் தியேட்டர்களில் கூடியிருந்தனர்.

* ரசிகர்கள் அதிகாலை 1 மணிக்கு தியேட்டர்களில் கேக் வெட்டி ரஜினி பிறந்த நாளை கொண்டாடினார்கள்.

* சென்னை காசி தியேட்டரில் ரஜினிகாந்த் பேஸ்புக் ரசிகர்கள் மன்றத்தினர் நூற்றுக்கணக்கானவர்களும், மற்ற ரஜினி ரசிகர் மன்றத்தினரும் திரண்டு இருந்தனர். அதிகாலை 1 மணி ஆனதும் அவர்கள் அங்கு ‘கேக்’ வெட்டி கொண்டாடினார்கள்.

* பெரும்பாலான ரசிகர்கள் ரஜினி படம் போட்ட டி– சர்ட் அணிந்து தியேட்டர்களுக்கு வந்து இருந்தனர்.

* ரஜினி ரசிகர்கள் சிலர் தியேட்டர்களில் ‘கேக்’ வெட்டி கொண்டாடியதும் மோட்டார் சைக்கிள்களிலும், கார்களிலும் ரஜினி வீடு அமைந்துள்ள போயஸ் கார்டன் நோக்கிச் சென்றனர்.

* ரஜினி வீட்டின் முன் ஆடிப்பாடி பிறந்த நாளை கொண்டாடினார்கள். அதன் பிறகு ‘லிங்கா’ படம் பார்க்க தியேட்டர்களுக்கு சென்றனர்.

* சைதை ரஜினி ரசிகர்கள் 800 பேர் முதல் நாளில் முதல் ஷோவில் லிங்கா படம் பார்க்க முன்பதிவு செய்து இருந்தனர். அதன்படி அவர்கள் சைதாப்பேட்டையில் உள்ள இரு தியேட்டர்களில் லிங்கா படம் பார்த்தனர்.

* 4 ஆண்டுகளுக்கு பிறகு ரஜினியின் ‘ஆக்ஷன்’ படம் வெளியானதால் தியேட்டர்களில் ரசிகர்கள் கூட்டம் திரண்டு இருந்தது. இதனால் தியேட்டர்கள் திருவிழாக் கோலம் பூண்டு இருந்தது.

* தியேட்டர்களில் வைக்கப்பட்டு இருந்த ரஜினி பேனருக்கு ரசிகர்கள் பாலா பிஷேகம் செய்து கொண்டாடினார்கள்.

* ரஜினி படம் பார்க்க ஜப்பானில் இருந்து அவரது ரசிகர்கள் சென்னை வந்திருந்தனர். ஜப்பானியர்களான அவர்கள் தியேட்டர் முன் ரஜினி பட பாடலை பாடியவாறு கொண்டாடினார்கள்.

* பெங்களூரில் லிங்கா படம் திரையிடப்பட்ட தியேட்டர்களில் ரசிகர்கள் பட்டாசு வெடித்து ஆரவாரம் செய்தனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries