நெல்லையில் நாளை கத்தி வெற்றி விழா: விஜய்–சமந்தா பங்கேற்பு

c89038a0-7d4d-4d60-8b36-fc07e5e96ef5_S_secvpfநடிகர் விஜய் நடித்து வெளியான ‘கத்தி’ திரைப்படம் 50 நாளை கடந்து வெற்றிகரமாக ஓடி வருகிறது. இதை கொண்டாடும் வகையில் நடிகர் விஜயின் ரசிகர்கள் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் விழா கொண்டாடி வருகிறார்கள்.

நெல்லை, தூத்துக்குடி, குமரி மாவட்ட விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய் மக்கள் இயக்கம் சார்பாக நெல்லையில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கத்தி பட வெற்றி விழா மற்றும் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கும் விழா நடைபெறுகிறது.

இதற்காக பாளை கோர்ட்டு எதிரே உள்ள பெல் பள்ளி மைதானத்தில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட்டு உள்ளது. விழாவில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் பங்கேற்க உள்ளனர். விழாவில் பங்கேற்பதற்காக விஜய் நாளை மதியம் விமானம் மூலம் தூத்துக்குடி வருகிறார். பின்னர் அவர் காரில் நெல்லை வருகிறார்.

நெல்லை மாவட்ட எல்லையில் விஜய்க்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது. விஜய்யுடன் கத்தி பட நாயகி சமந்தா, நகைச்சுவை நடிகர் சதீஷ், டைரக்டர் முருகதாஸ், இசையமைப்பாளர் அனிருத் ஆகியோரும் வருகின்றனர்.

மதியம் 1.30 மணி அளவில் விழா மேடைக்கு வரும் விஜய் ரசிகர்கள் மத்தியில் பேசுகிறார். முன்னதாக கத்தி படத்தில் நடித்த அனுபவம் பற்றி சமந்தாவும், இயக்குனர் முருகதாஸ், நடிகர் சதீஷ் போன்றோரும் பேசுகிறார்கள்.

ரசிகர்மன்ற நிர்வாகிகள், விஜய் மக்கள் இயக்க பிரமுகர்கள் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. திரை உலகில் உச்சத்துக்கு வந்த பின்னர் நெல்லையில் விஜய் பிரமாண்டமான விழாவில் பங்கேற்பது இதுதான் முதல்முறை என்பதால் ரசிகர்களிடையே உற்சாகம் ஏற்பட்டு உள்ளது.

விஜயை வரவேற்று ரசிகர்கள் பல இடங்களில் வரவேற்பு டிஜிட்டல் பேனர்களை வைத்துள்ளனர். நகரின் முக்கிய பகுதிகளில் விஜய் மக்கள் இயக்க கொடியும் கட்டப்பட்டு உள்ளன. இதனால் பாளை நகர் பகுதி விழா கோலம் பூண்டு உள்ளது. விழாவில் கத்தி திரைப்பட வினியோகஸ்தர்கள், கத்தி படம் வெளியான தியேட்டர் அதிபர்கள் கவுரவிக்கப்படுகின்றனர்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries