அனுஷ்காவுக்கு விரைவில் திருமணம்: சினிமாவை விட்டு விலக முடிவு

209c99d9-7adf-4513-9cc7-d4cd41a926c8_S_secvpf2005–ல் தெலுங்கில் கதாநாயகியாக அனுஷ்கா அறிமுகமானார். தமிழில் அனுஷ்காவின் முதல் படம் ‘ரெண்டு’ 2006–ல் வந்தது. தொடர்ந்து ‘வேட்டைக்காரன்’, ‘சிங்கம்’, ‘வானம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தாண்டவம்’, ‘அலெக்ஸ் பாண்டியன்’, ‘இரண்டாம் உலகம்’ படங்களில் நடித்தார்.

ரஜினியுடன் அனுஷ்கா நடித்த ‘லிங்கா’ படம் நேற்று ரிலீசானது. அஜீத்துடன் ‘என்னை அறிந்தால்’ படத்தில் நடித்துள்ளார். தெலுங்கில் ‘ருத்ரமாதேவி’ ‘பாகுபலி’, சரித்திர படங்களில் நடிக்கிறார்.

அனுஷ்காவுக்கு புதுபட வாய்ப்புகள் குவிகின்றன. ஆனால் எந்த படத்துக்கும் கால்சீட் கொடுக்கவில்லை. புது படங்களில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது. நடிப்புக்கு முழுக்கு போட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அனுஷ்காவுக்கு 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் மாப்பிள்ளை பார்க்கின்றனர். விரைவில் அவருக்கு திருமணம் நடக்கும் என்கின்றனர். இதற்காகவே படங்களில் நடிக்க மறுப்பதாக கூறப்படுகிறது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries