ரஜினியின் லிங்கா படம் வசூல் சாதனை: ஒரே நாளில் ரூ.15 கோடியை தாண்டியது

e3ab85e3-787c-4310-a905-5d03a21adf1c_S_secvpfரஜினி நடிப்பில் வெளிவந்துள்ள ‘லிங்கா’ படம் உலகம் முழுவதும் 4000 தியேட்டர்களில் நேற்று ரிலீசானது. தமிழ்நாட்டில் 700–க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் திரையிடப்பட்டது. தெலுங்கிலும் ரிலீசானது. ஒரு வாரத்துக்கு எல்லா தியேட்டர்களிலும் டிக்கெட் முன்பதிவு முடிந்துள்ளது.

தமிழ், தெலுங்கில் முதல் நாளில் ரூ.15 கோடி வரை வசூல் ஈட்டி இருப்பதாக திரையரங்குகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. ரஜினியின் ‘எந்திரன்’ படம் தமிழ்நாட்டில் முதல் நாளில் ரூ.11 கோடி வரை வசூலித்தது. அந்த வசூலை ‘லிங்கா’ முறியடித்து இருப்பதாக கூறப்படுகிறது.

‘லிங்கா’ படத்தை ராக்லைன் வெங்கடேஷ் தயாரித்துள்ளார். இதன் மொத்த செலவு ரூ.110 கோடிவரை இருக்கும் என்கின்றனர். ஈராஸ் நிறுவனம் உலகம் முழுவதும் திரையிடும் உரிமையை பெற்றது. ரூ.130 கோடி கொடுத்து அந்த நிறுவனம் இப்படத்தை வாங்கியதாக கூறப்படுகிறது. டெலிவிஷன் உரிமைகள் ரூ.80 கோடிக்கு விற்கப்பட்டு உள்ளன. படம் ரிலீசாகும் முன்பே ரூ.90 கோடிவரை லாபம் ஈட்டியதாக கூறப்படுகிறது.

ரஜினி படங்கள் கடந்த 4 வருடங்களாக வரவில்லை. கோச்சடையான் அனிமேஷன் படமாக வந்தது. நீண்ட இடைவெளிக்கு பிறகு ‘லிங்கா’ வந்ததால் ரசிகர்களிடம் பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆர்வத்தோடு படம் பார்த்தார்கள்.

இன்றும் நாளையும் விடுமுறை தினங்கள் என்பதால் வசூல் அதிகமாகும் என்கின்றனர். இப்படத்தில் ரஜினி இரு வேடங்களில் நடித்துள்ளார். நாயகிகளாக அனுஷ்கா, சோனாக்சி சின்ஹா நடித்துள்ளனர். கே.எஸ். ரவிக்குமார் இயக்கியுள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries