வை ராஜா வை படத்தில் எனக்கு பவர்புல் கதாபாத்திரம்: டாப்ஸி

1066a5a6-4f2b-47a6-9c8d-912c7c8a19ab_S_secvpfதமிழில் ‘ஆடுகளம்’ படம் மூலம் நடிகையாக அறிமுகமானவர் டாப்ஸி. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். இப்படத்திற்குப் பிறகு ஜீவாவுடன் இணைந்து ‘வந்தான் வென்றான்’ படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு தெலுங்கில் பட வாய்ப்புகள் குவிந்ததால் அங்கு நடிக்க சென்றுவிட்டார்.

கடந்த வருடம் அஜீத் நடிப்பில் வெளியான ‘ஆரம்பம்’ படத்தில் டாப்ஸி நடித்திருந்தார். தற்போது ஐஸ்வர்யா தனுஷ் இயக்கி வரும் ‘வை ராஜா வை’ படத்தில் நடித்து வருகிறார். மேலும் ராகவா லாரன்ஸ் இயக்கிவரும் ‘முனி 3’ படத்திலும் நடித்து வருகிறார். இவ்விரு படங்களும் அடுத்த வருடம் வெளியாகவுள்ளது.

வை ராஜா வை படத்தில் நடித்திருப்பது பற்றி டாப்ஸி கூறும்போது, நான் இந்தப் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறேன். இதில் எனக்கு பவர்புல்லான கதாபாத்திரம். ஸ்ரேயா என்னும் கதாபாத்திரத்தில் வில்லியாகவும் கதாநாயகனுடன் ரொமன்ஸ் செய்து விட்டு தன்னுடைய நோக்கம் முடிந்தவுடன் செல்லும் வகையில் அமைந்துள்ளது என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

TamilWire Movies - Latest Tamil Movie Trailers to Watch Online