தனுஷ் படத்தில் விஜய் யேசுதாஸ்

792420b9-4f70-4eaf-bf25-3cc171fabb14_S_secvpf‘காதலில் சொதப்புவது எப்படி’, ‘வாயை மூடி பேசவும்’ ஆகிய படங்களை இயக்கிய பாலாஜி மோகன் தனுஷை வைத்து இயக்கவிருக்கும் புதிய படம் ‘மாரி’. இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கவிருக்கிறார்.

தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனமும், ராதிகா சரத்குமாரின் மேஜிக் பிரேம்ஸ் நிறுவனமும் இணைந்து இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரிக்கிறது. அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தில் பின்னணி பாடகரான விஜய் யேசுதாஸ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறாராம். விஜய் யேசுதாஸ் ஏற்கெனவே, மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். விஜய் யேசுதாசும், தனுஷும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் அடிக்கடி பார்ட்டிகளில் கலந்து கொண்டு தங்கள் நட்பை வளர்த்துக் கொண்டுள்ளனர்.

இந்நிலையில், மாரி படத்தில் நடிக்க விஜய் யேசுதாஸ் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இப்படத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்தை விரைவில் தொடங்கவுள்ளனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை சோனி நிறுவனம் பெற்றுள்ளது.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries