எனக்கு மிகப்பெரிய வழிகாட்டி தனுஷ்: ஐஸ்வர்யா தனுஷ்

bfb58c92-acad-4755-8505-31338e4875b1_S_secvpfதனுஷ் நடித்த ‘3’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஐஸ்வர்யா தனுஷ். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடித்திருந்தார். இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. குறிப்பாக அனிருத் இசையில் அமைந்த ‘கொலவெறி…’ பாடல் பட்டிதொட்டி எங்கு எதிரொலித்தது.

இப்படத்தின் வெற்றிக்குப் பிறகு ஐஸ்வர்யா தனுஷ் தற்போது இயக்கிவரும் படம் ‘வை ராஜா வை’. இப்படத்தில் கௌதம் கார்த்திக் நாயகனாவும், பிரியா ஆனந்த் நாயகியாகவும் நடித்துள்ளார்கள். யுவன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்து வருகிறார்.

சமீபத்தில் இப்படத்தின் பாடல்கள் வெளியிடப்பட்டன. காமெடி கலந்த பொழுதுபோக்கு படமாக உருவாகும் இப்படம் அடுத்த வருடம் திரைக்கு வரவிருக்கிறது.

இப்படத்தை இயக்குவது பற்றி ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, ‘நான் முதல் படம் இயக்கும்போது அதிக தீவிரம் காட்டவில்லை. ஆனால் அடுத்தப் படத்தில் எதாவது புது முயற்சியாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அதற்காக புது முயற்சிகளை எடுத்து வருகிறேன்.

நானும் தனுஷும் பட வேலைகளில் பிசியாக இருப்பதால் வீட்டில் பேசிக்கொள்வது சிறிது நேரம் தான். ஆனால், தனுஷுக்கு என்னுடைய படத்தின் கதை தெரியும். இவர் என்னுடைய சீனியர் மற்றும் எனக்கு மிகப்பெரிய வழிகாட்டியாகவும் இருக்கிறார்.

மேலும் நிறைய உதவிகளையும் செய்திருக்கிறார். இவர் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கிறார். இதை படமாக்கும் போது எனக்கு பெரும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்றார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries