2015-லும் மிரட்ட வரும் ர படக்குழுவினர்

97d4289f-77f2-40c7-bc80-7e901256ac60_S_secvpfபுதுமுகங்கள் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் ‘ர’. படம் இயக்குனர் முதற்கொண்டு, படத்தில் நடித்திருந்த அனைவரும் புதுமுகங்களே. இப்படம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தாலும், ஒரு சில ரசிகர்களை மிகவும் குழப்பமடையவே செய்திருக்கிறது.

காரணம், இது பேய் படமா? அல்லது பேன்டஸி படமா? என்று அனைவரும் குழம்பியிருக்கிறார்கள். முதல் பாதியில் பேய் படம் போல் நகரும் கதைக்களம், இரண்டாம் பாதியில் பேன்டஸி படமாக நகர்வதுதான் குழப்பத்திற்கு காரணம்.

இதுகுறித்து படக்குழுவினரிடம் கேட்டபோது. ஒரு கதையை இரு வேறு தளங்களில் பயணிக்கும் வகையில் படமாக்குவது என்பது தமிழ் சினிமாவுக்கு புதிது. இந்த புதிய முயற்சியை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தவே இந்த முறையை கையாண்டோம் என்றனர்.

மேலும் அவர்கள் கூறும்போது, படத்தில் சிவப்பு கதவு ஒன்று வரும். அது மனித மூளையின் செயல்பாட்டை குறிக்கும் விதமாக படமாக்கியிருக்கிறோம். இதேபோல், மனிதனின் ஆழ்மனதில் உருவாகும் உணர்வுகளை முக்கிய பதிவுகளாக காட்சிப்படுத்தியிருக்கிறோம். மனிதனின் ஒவ்வொரு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் விதமாக படத்தில் இடம்பெறும் அஜய் கதாபாத்திரத்தை அமைத்திருத்தோம்.

2014-ல் அனைவரையும் மிரட்டிய நாங்கள், மீண்டும் 2015-லும் மிரட்ட வருகிறோம் என்றார்கள்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries