ஹாலிவுட் படத்துடன் இணைந்த ஐ

7c980e69-cfd7-4681-ad9a-70b6795dc7bc_S_secvpfஷங்கர் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ஐ’ படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, அனைவரையும் வியக்க வைத்துள்ளது. இந்த படத்தின் டிரைலர் தயாராகிவிட்ட நிலையில், விரைவில் வெளியிடவுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் டீசரை, ஹாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் தி ஹாப்பிட் (The Hobbit. The Battle of Five Armies) என்ற படத்துடன் இணைத்து வெளியிட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

நேற்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ள இப்படம், வட அமெரிக்காவில் மட்டும் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீஸ் ஆகியுள்ளது. ஒரு ஹாலிவுட் படத்தின் இடையில் வெளியாகும் முதல் தமிழ் பட டீசர் என்ற பெருமையை ஐ திரைப்படம் பெற்றுள்ளது.

இதுதவிர, அமீர்கான் நடிப்பில் இந்தியில் உருவாகியுள்ள ‘பி.கே.’ படத்தின் இடையிலும் ஐ படத்தின் இந்தி டீசரை வெளியிட ஒப்பந்தம் செய்துள்ளனர்.

ஐ படத்தில் விக்ரம்-எமிஜாக்சன் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இப்படத்தை ஆஸ்கார் ரவிச்சந்திரன் பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார்.

Post your comment

TamilWire.NET - Latest English News

TamilTunes.com - Latest Songs Downloads

Tamil.Movie - Latest Tamil Movie Trailers to Watch Online

Tamil.Gallery - Latest Tamil Galleries